Yoga Asanas For Diabetes: யோகா ஆசனங்களை தவறாமல் பயிற்சி செய்வது பல முழுமையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருத்துவர் மற்றும் யோகா நிபுணருடன் கலந்தாலோசித்த பிறகு யோகா செய்து பயனடையலாம்
உயர் இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் சில முக்கிய ஆசனங்கள் மற்றும் தியான நடைமுறைகள் இவை
யோகாவில், சர்க்கரை வியாதியை நோயாகப் பார்ப்பதில்லை. உடம்பின் அடிப்படை பாதிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது கருதப்படுகிறது.
எதனால் சர்க்கரை நோய் உண்டானது என்று ஆராய்ந்து பாதிப்பின் தன்மை, அளவு பொருத்து யாருக்கு எது பொருந்தும் என்று முடிவு செய்யவேண்டும்
யோகா செய்வதன் மூலம் உடம்பை சமன்செய்யும் சக்திநிலை, ஆற்றலைக் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஒருவரின் உடலில் சக்திநிலை சமன்படும்போது உடம்பின் வெளியிலோ உள்நிலையிலோ நாட்பட்ட நோய்கள் ஏற்படாது
உடலை வளைத்து நெளித்து யோகா செய்வது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், நாள்டைவில் உடல் நெகிழ்ச்சித்தன்மை அடைந்துவிடும்
தொடர்ந்து யோகா செய்வதால் தொடைகள் மற்றும் ஆடுகால் தசைகள் இறுக்கமாகும்
உடலின் ரத்த ஓட்டம் சீராகும்
மனஅழுத்தத்தை கையாள்வதற்கு யோகா உதவுகிறது
உடலுக்கும் மனதிற்கும் வலுவூட்டி, நோய்களை போக்கும் யோகா தொடர்பான உலகளாவிய விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது