பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு 3-வது முறையாக நேபாளத்திற்கு பயணம் செல்ல இருக்கிறார். நேபாளத்தின் பிரதமராக பதவியேற்ற கே.பி. ஷர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி நேபாளத்திற்கு செல்லும் பிரதமர், அருண்-3 எனப்படும் 900 மெகாவாட் புதிய ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்திட்டம், பீகார் ராக்ஸ்- நேபாளத்தின் காத்மண்டு இடையேயான ரயில் போக்குவரத்து திட்டம் உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக நேபாளம் சென்றது குறிப்பிடத்தக்கது.