பாலியல் வன்முறை, பலாத்காரம் போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைதான் காரணம் எனக்கூறினால் அது முட்டாள் தனமானது என அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றது. எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பாலியல் வன்முறை பற்றி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது.....!
பெண்களுக்கு எதிராக வன்முறை, குற்றங்களை நிறுத்துவதற்கு அரசு நிறுவனங்கள் ஏதும் செய்ய முடியாது. பலர் பெண்களின் உடைதான் இது போன்ற வன்முறைகளுக்கு காரணமா என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது மட்டும் காரணம் கிடையாது என்று கூறினார்.
மேலும், பெண்களுக்கு எதிரான கணிசமான எண்ணிக்கையிலான குற்றங்கள் தெருக்களில் நடைபெறுவது இல்லை, அவர்களு டைய வீடுகளில்தான் நடைபெறுகிறது என்றும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முயற்சிக்கும்போது காவலர்துறையினர் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றார்.
மேலும், தற்போது சிலரை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்ற அமைச்சர் மூதாட்டிகளும், குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்படுவது ஏன்? என்றுகேள்வி எழுப்பினார். பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களில் 10ல் ஏழு பேர், நண்பர்கள், உறவினர்களால் பாதிக்கப்படுகின்றனர் என கூறினார்.
Calling for a change in mindset, Defence Minister #nirmalasitharaman said, it is ridiculous to claim that a woman's attire is the reason behind a #rape
Read @ANI Story | https://t.co/qyi7otb6Q7 pic.twitter.com/hod28IjL3I
— ANI Digital (@ani_digital) May 8, 2018