இளையராஜாவின் நண்பருடைய அற்புத வீடியோவை ஷேர் செய்தார் நடிகர் விவேக்

நடிகர் விவேக்கின் சமீபத்திய வீடியோவில் மூத்த பியானோ கலைஞர் திரு. ராவ் மற்றும் அவரைப் பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2021, 06:27 PM IST
  • நடிகர் விவேக் அவ்வப்போது பல விஷயங்களை தன்னுடைய சமூக ஊடக கணக்கில் பகிர்ந்து வருகிறார்.
    விவேக்கின் சமீபத்திய வீடியோவில் மூத்த பியானோ கலைஞர் திரு. ராவ் பற்றி கூறியுள்ளார்.
    இவரும் இளையராஜா அவர்களும் ஒன்றாக தன்ராஜ் மாஸ்டரிடம் கற்றனர்-விவேக்.
இளையராஜாவின் நண்பருடைய அற்புத வீடியோவை ஷேர் செய்தார் நடிகர் விவேக் title=

தமிழ் திரை உலகின் மூத்த நகைச்சுவை நடிகர் விவேக் கோலிவுட்டில் மிகவும் மரியாதைக்குரிய நகைச்சுவை நட்சத்திரங்களில் ஒருவராவார். இது தவிர அவர் ஒரு சமூக ஆர்வலராகவும் உள்ளார். அது மட்டுமின்றி அவர் ஒரு இசைக்கலைஞரும் ஆவார். அவ்வப்போது அவர் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் பற்றிய செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல், அவர் வளர்ந்துவரும், இசை கலைஞர்களைப் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பழக்கம் கொண்டவர். 

விவேக்கின் (Vivek) சமீபத்திய வீடியோவில் மூத்த பியானோ கலைஞர் திரு. ராவ் மற்றும் அவரைப் பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதுகையில், "இவர்தான் திரு.ராவ். தற்போதிருக்கும் ஒரே மூத்த பியானோ ட்யூனர் கலைஞராவார் இவர் !! இவரும் இளையராஜா (Illayaraja) அவர்களும் ஒன்றாக தன்ராஜ் மாஸ்டரிடம் கற்றனர். ஒருவர் வெஸ்டர்ண் மியூசிக் கற்றார், மற்றவர் ட்யூனிங் கற்றார். ஒருவரது மெட்டுக்கள் மனதை மயக்கும், மற்றவருடைய மெட்டுக்கள் தேனாய் பாயும்!!” என்று எழுதியுள்ளார். 

2020 சூப்பர் ஹிட் படமான (Movie) 'தாராளப் பிரபு’ மூலம் மக்களை மகிழ்வித்த விவேக், தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ALSO READ: நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும்: வைரல் ஆன பாஜக தலைவர் ட்வீட்

ALSO READ: Oprah Winfrey நிகழ்ச்சியில் இந்திய கலாசாரம் பற்றி ஐஸ்வர்யா ராயின் சாதுரியமான பதில்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News