ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது மிகவும் அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில், ஆர்ட்ர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக, வேறு பொருட்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது. வாடிக்கையான இந்த நிகழ்வு, வாடிக்கையாளர்களுக்கு சில சமயங்களில் வேடிக்கையாக இருக்கலாம், பல சமயங்களில் வேதனையான நிகழ்வாகவும் மாறுவது உண்டு. அதிலும், விலையுயர்ந்த பொருளை ஆர்டர் செய்து, விலை குறைந்த பொருட்களைப் பெறுவதை வழக்கமாகக் காணலாம்.
அமேசானில் இருந்து பாஸ்போர்ட் அட்டையை ஒருவர் ஆர்டர் செய்தார். ஆனால் வந்த பொருளோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொருளை வாங்கியவர், வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து புகார் அளித்தார். ஆனால் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் அளித்த பதில் வாடிக்கையாளரின் அதிர்ச்சியை அதிகரித்தது.
இது மிகவும் வித்தியாசமான கதை. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கணியம்பேட்டாவைச் சேர்ந்த மிதுன் பாபு என்ற நபர், ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் அட்டைக்கு பதிலாக அசல் பாஸ்போர்ட் கிடைத்தது!
READ ALSO | மனதில் தைரியம் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய வீடியோ!
அக்டோபர் 30 ஆம் தேதி அமேசானில் பாஸ்போர்ட் கவரை ஆர்டர் செய்தார் வயநாட்டைச் சேர்ந்த நபர் நவம்பர் 1 ஆம் தேதி, அவரது ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரி பாக்கெட்டைத் திறந்து பார்த்தபோது கவருடன் உண்மையான பாஸ்போர்ட் இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவருக்கு வந்த பாஸ்போர்ட், அவருடையது அல்ல, திருச்சூரில் உள்ள குன்னம்குளத்தில் வசிக்கும் முஹம்மது சாலிஹ் என்பவருடையது என்பதால் அவருடைய அதிர்ச்சி மேலும் அதிகமானது.
ALSO READ | Amazon அட்டகாச தீபாவளி சரவெடி: 70% தள்ளுபடி, எக்கச்சக்க சலுகைகள்
பாஸ்போர்ட் கவருக்கு ஆர்டர் செய்த நபர் உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து புகார் அளித்தார். கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ் அளித்த பதில் மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. தவறை பெரியதாக எடுத்துக் கொள்ளாத கஸ்டமர் கேர் அதிகாரி, வழக்கமான இயந்திரத்தனமான பதிலையே சொன்னார்.
”எதிர்காலத்தில் இது போன்ற ஒரு விஷயம் மீண்டும் நடக்காது, அடுத்த முறை மிகவும் கவனமாக இருக்குமாறு விற்பனையாளரை அறிவுறுத்துகிறேன்” இதுதான் வாடிக்கையாளர் நலனை பாதுகாக்கும் அதிகாரி சொன்ன பதில்!!!
சரி, தனக்கு விநியோகிப்பட்ட வேறு ஒருவருடைய பாஸ்போர்ட்டை என்ன செய்வது என்று கஸ்டமர் கேர் அதிகாரி சொல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் மிதுன் பாபு பாஸ்போர்ட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார்.
இதுபோன்ற குளறுபடிகள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு அக்டோபரில், கேரளாவில் உள்ள ஆலுவாவைச் சேர்ந்த ஒருவர் அமேசானில் இருந்து ஐபோன் 12 ஐ ஆர்டர் செய்திருந்தார், ஆனால் அவருக்கு பாத்திரம் கழுவும் சோப்புடன் ரூ.5 நாணயத்தை அமேசான் அனுப்பிவைத்தது.
பாஸ்போர்ட் எப்படி டெலிவரி செய்யப்பட்டது என்ற விவகாரம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
Also Read | நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்படும் வீடியோ வைரல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR