மாப்பிள்ளை போட்ட குத்தாட்டம், பொண்ணு பண்ண வேலைய பாருங்க: வேற லெவல் வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகன் மிக நன்றாக ஆடுகிறார் என்றால், மணமகளும் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடுகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 28, 2023, 12:45 PM IST
  • திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
  • இந்த தருணங்களின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
  • திருமணத்தில் ஆடப்படும் நடனங்கள் இந்த மகிழ்ச்சியின் சான்றாக அமைகின்றன.
மாப்பிள்ளை போட்ட குத்தாட்டம், பொண்ணு பண்ண வேலைய பாருங்க: வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான வேடிக்கையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் காதல் அரும்பிவிடும். சில சமயங்களில் இருவரும் சேர்ந்து வேடிக்கையான விஷயங்களை செய்வதுமுண்டு. பல சமயங்களில் இருவரும் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் பக்காவாக நடனமாடுவார்கள். திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். இந்த தருணங்களின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். திருமணத்தில் ஆடப்படும் நடனங்கள் இந்த மகிழ்ச்சியின் சான்றாக அமைகின்றன. முன்னர் மணமக்களின் நண்பர்களும் உறவினர்களும் நடனமாடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் மணமக்களே மாஸாக நடனமாடி பட்டையை கிளப்பி விடுகிறார்கள். 

இப்படிபட்ட பல வீடியோக்கள் இணையத்தில் காணப்படுகின்றன. இந்த வீடியோக்கள் மணமக்களின் மனநிலையை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன. இவை வேடிக்கையாக இருப்பதோடு சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | சீண்டிய சிறுவனை சும்மா விடுமா குரங்கு? வேற லெவல் வைரல் வீடியோ

மணமக்களின் மாஸ் நடனம்

மணமகன் மற்றும் மணமகளின் ஒரு அற்புதமான நடன நிகழ்ச்சி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் புதுமண தம்பதிகள் ஒரு பிரபல இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் பிரபல நடிகர் கோவிந்தாவின் பாடலில் மணமகன் அற்புதமான மூடை உருவாக்கினார். வைரலான வீடியோவில், இந்த ஜோடி கோவிந்தாவின் புகழ்பெற்ற பாடலான 'குலா ஹை மேரா பின்ஜ்ரா' பாடலில் நடனமாடுவதைக் காண முடிகின்றது. இந்த நடன வீடியோவை பார்த்த இணையவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

மணமேடையில் அசத்திய மணமக்களின் வீடியோவை இங்கே காணலாம்:

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

மணமகனும், மணமகளும் பாரம்பரிய திருமண உடையில் பாடலுக்கு அசால்டாக நடனமாடுகிறார்கள். மணமகன் மிக நன்றாக ஆடுகிறார் என்றால், மணமகளும் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடுகிறார். அங்கு அமர்ந்திருந்த விருந்தினர்களும் அவர்களை உற்சாகப்படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது. 

கியூட்டான இந்த மணமக்களின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தண்ணீரில் குதியாட்டம் போடும் யானைகள்! டாப்ஸ்லிப் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News