பந்தா காட்டிய மணமகள், மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகள் பந்தா காட்ட, அவரை சமாதானப்படுத்த மணமகன் செய்த கியூட் செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 31, 2022, 11:31 AM IST
  • மாலையை ஏற்றுக்கொள்ள பந்தா காட்டும் மணமகள்.
  • மண்டியிட்டு காதலை உணர்த்திய மாப்பிள்ளை.
  • வைரலான கியூட் வீடியோ.
பந்தா காட்டிய மணமகள், மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன. 

திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் சீரான இடைவெளியில் பகிரப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு முறையும் மணமகன் மற்றும் மணமகள் மற்றும் திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களின் பல வித வேடிக்கைகளும் கேளிக்கைகளும் காணக்கிடைக்கின்றன. திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சில விஷயங்கள் விருந்தாளிகளை மட்டுமல்லாமல், இணையவாசிகளும் ஆச்சரியப்படுகின்றன, அதிர்ச்சியடைகின்றன. 

அந்த வகையில், ஒரு திருமணத்தில் நடந்த மாலை மாற்றும் நிகழ்வு ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மணமகள் மணமகனை பாடாய் படுத்துவதை காண முடிகின்றது. மணமகன் அவருக்கு மாலை அணிவிக்க சென்றபோது, அவர் கோபப்பட்டு மாலையை ஏற்க மறுக்கிறார். அவர் கோபப்படத் தொடங்குவதை வீடியோவில் நீங்கள் காண முடிகின்றது. ஆனால், சில நிமிடங்களில் மாப்பிள்ளையின் ரோமாண்டிக் பாணியை பார்த்த அவர் மாலையை ஏற்றுக்கொள்கிறார். 

மேலும் படிக்க | ஓடிய மாப்பிள்ளை, துரத்திய மணப்பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ 

பந்தா காட்டிய மணமகள்: 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகன் மணமகளுக்கு மாலை அணிவிக்க தயாராகி வருவதைக் காண முடிகின்றது. மணமகள் நின்றபடி சிரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் மணமகன் அவரிடம் சென்றவுடன், அவள் மாலையை ஏற்றுக்கொள்ளாமல் பந்தா காட்டத் தொடங்குகிறார். பல முறை முயற்சி செய்த பிறகும் மணமகள் ஒப்புக்கொள்ளாததால், மணமகன் ஆத்திரம் அடைந்து அமர்ந்து விடுகிறார். ஆனால், சிறிது நேரம் கழித்து அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த யோசனையின் துணையோடு அவர் உடனடியாக மணமகளை சமாதானப்படுத்துகிறார். 

திருமண கலாட்ட வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@photoshoot_wedding)

ரொமாண்டிக் ஆன மாப்பிள்ளை

வீடியோவின் முடிவில் மணமகன் மண்டியிட்டு அமர்ந்து மணமகளை சம்மதிக்க வைக்க முயல்வதையும், அவரது இந்த செயலால் மணமகள் உடனடியாக உருகிப்போவதையும் காண முடிகின்றது. ஒரு வழியாக மாலை மாற்றும் சடங்கு முடிகிறது. இந்த வீடியோ photoshoot_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | Shocking! ஆட்டோவின் கூரையில் பயணித்த மாணவர்கள்; அதிர்ச்சியூட்டும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News