பலரது வாழ்க்கையிலும் ஏதாவதொரு அதிசயம் நடந்து இருக்கும். சிலது அறிவியலில் இருந்து அப்பாற்பட்டும் நடக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை மறப்பதும் கடினம், நம்புவதும் கடினமாக இருக்கும். தலையே இல்லாமல் கிட்டத்தட்ட 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த கோழியை பற்றி கேள்விப்படும் போது அதே உணர்வு ஏற்படுகிறது. 'மைக்' என்ற கோழி நீண்ட நாட்கள் தலை இல்லாமல் உயிர்வாழ்ந்துள்ளது. 1945 காலகட்டத்தில் அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் ஓல்சென் குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் குடும்பத்தினருடன் மாலை கோழிக்கறி சாப்பிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | முத்தம் கொடுத்தது ஒரு குத்தமா... மணமகனை அடித்து துவைத்த மணப்பெண் வீட்டார்..!!
இதற்காக விவசாயி லாயிட் ஓல்சன் தனது வீட்டில் வளர்க்கும் கோழிகளில் இருந்து நல்ல திடமான கோழியை எடுத்து சமைக்க கொண்டு செல்கிறார். அந்த சமயத்தில் 'மைக்' என்று அழைக்கப்படும் அந்த கோழி பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. கோழியை வெட்டி சமைக்க முதலில் அதன் கழுத்து பகுதியில் வெட்டுகிறார். ஆனால் அப்போதும் அந்த கோழி சாகாமல் உயிருடன் இருந்துள்ளது. இதனால் ஓல்சன் அதிர்ச்சியிலும், ஆர்ச்சர்யத்திலும் இருந்துள்ளார். அவரை மட்டும் இல்லாமல் இந்த நிகழ்வு உலகையே உற்று பார்க்க வைத்தது.
தலை இல்லாமல் எப்படி உயிர் வாழ்ந்தது?
ஓல்சன் கோழியின் தலையை கோடாரி கொண்டு வெட்டி உள்ளார். அப்போது தலையின் பெரும்பாலான பகுதிகளை துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கழுத்து மற்றும் தொண்டை தொடர்பான நரம்பு கட்டாக வில்லை. இதன் காரணமாக கோழி உயிருடன் தப்பித்தது. மேலும் ஒரு காது மற்றும் மூளையின் பெரும்பாலான பகுதி இதில் சேதமடையவில்லை. இதன் காரணமாக உயிருடன் இருந்துள்ளது. இந்த அதிசய நிகழ்விற்கு பிறகு ஓல்சன் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராக மாறியது மைக் என்ற அந்த கோழி. அந்த கோழிக்கு தேவையான முழு பராமரிப்பையும் மேற்கொண்டார் ஓல்சன்.
தினசரி பாலும் தண்ணீரும் கலந்த உணவை கோழிக்கு கொடுத்து, கண் சொட்டு மருந்தும் அளித்து வந்தார் ஓல்சன். இந்த நிகழ்வு அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. பல பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்தது. இதுமட்டுமின்றி தலை துண்டிக்கப்பட்ட மைக் என்ற அந்த கோழி 25 சென்ட் செலவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பெரும் புகழ் பெற்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு, "மைக் தி ஹெட்லெஸ் சிக்கன் டே" என்ற தினம் 1999 ஆம் ஆண்டு முதல் மே மாதத்தின் ஒவ்வொரு மூன்றாவது வார இறுதியில் அந்த பகுதியில் கொண்டாடப்படுகிறது.
கோழி உரிமையாளரான ஓல்சன் இதன் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் $45,000 சம்பாதித்து உள்ளார். அதேசமயம் அந்த அதிசய கோழி $10,000 என மதிப்பிடப்பட்டது. கிட்டத்தட்ட 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த இந்த கோழி சோளத் துண்டு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
மேலும் படிக்க | நடுரோட்டில் போலீசை வம்பிழுக்கும் நாய்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ