Viral Video: சாப்பிடு செல்லம்! ஆமை நண்பனைக் கொஞ்சும் சிம்பன்சி வீடியோ வைரல்

Chimpanzee Love Video: விருந்தோம்பல் என்பது மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்? இதுவொரு அழகிய அன்புக்காலம்! அன்புக்கும் உண்டோ இன வேறுபாடு என்று சிந்திக்க வைக்கும் சிம்பன்சியின் அன்பு வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 30, 2023, 10:37 AM IST
  • விருந்தோம்பல் என்பது மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்?
  • அன்புக்கும் உண்டோ இன வேறுபாடு
  • சிந்திக்க வைக்கும் சிம்பன்சியின் அன்பு வீடியோ
Viral Video: சாப்பிடு செல்லம்! ஆமை நண்பனைக் கொஞ்சும் சிம்பன்சி வீடியோ வைரல் title=

வைரலாகும் சிம்பன்சி வீடியோ: இணையதளமும், டேட்டாக்களும் நமது வாழ்வில் இன்று தினசரி கேட்கும் வார்த்தைகளாகிவிட்டன. எனவே இண்டர்நெட் உலகம் என்ற தனி வார்த்தை, நமது தினசரி வாழ்க்கைக்குள் அடங்கிவிட்டது. உலக விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள உதவும் இணையதளமும், சமூக ஊடகங்களும் என்ன விஷயம் எங்கு நடந்தாலும், அதை உடனே நமக்கு கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் உடனுக்குடன் பகிரப்பட்டு, நமக்கு பொழுதுபோக்கவும், பயனுள்ள தகவல்களை கொடுக்கும் ஊடகங்களை சரியாக பயன்படுத்தினால் அது வாழ்க்கைக்கு நல்லதே.  

இணையதளங்களும், ஊடகங்களும் கேளிக்கைக்கான ஒரு வழியாக இருந்தாலும், நாம் பார்க்கவே முடியாத பல விஷயங்களை நமக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இதில் பொழுதைப் போக்க நாம் பாக்கும் காணொளிகள் நமது பொழுதையே போக்கிவிடுகின்றன.

மேலும் படிக்க | யார் ஜெயிச்சாலும் பரிசு ‘தங்க மீன்’! நோ வெள்ளி வெண்கலம் ப்ளீஸ்! வைரலாகும் நீச்சல் போட்டி!

இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களை பார்த்தால், பொழுது போவதே தெரிவிதில்லை. அதிலும், விலங்குகளின் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினால், அடுத்தடுத்து வரும் வீடியோக்களுக்கு நாம் அடிமையாகிவிடுகிறோம். விலங்குகளின் வீடியோக்களுக்கென இருக்கும் ரசிகர் பட்டாளத்தில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டாமே?

மேலும் படிக்க | பகையாளியா பங்காளியா? குஸ்தி போடும் சிங்கங்களின் மூர்க்கச்சண்டை வீடியோ வைரல்

ஆமாம், விலங்குகளின் அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் கண்டு மகிழ்கிறோம் என்று பதில் சொல்பவரா நீங்கள்? அப்படியென்றால், இந்த வீடியோவை நீங்கள் கண்டிப்பாக ரசித்து பார்க்கலாம்.

 இணையத்தில் வெளியாகி நீண்ட நாட்களானாலும், அன்பால் அனைவரையும் ஈர்க்கும் இந்த வீடியோவில் ஒரு சிம்பன்சி, தன்னிடம் உள்ள உணவை பகிர்ந்துக் கொள்வது ஆச்சரியமானதாக உள்ளது.  

உண்மையில், இதுபோன்ற அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள், நம்மிடம் மறைந்து வரும் பண்பை, மீண்டும் தழைத்தோங்கச் செய்யும். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Dicky Snake: டிக்கிக்குள் டிக்கிலோனா செய்யும் பாம்பு! லந்து பண்ணும் பாம்பை லபக்கிய நபர்

கூழாக இருந்தாலும் அதையும் பகிர்ந்துக் கொடுத்து வந்த பண்பாளர்கள் மனிதர்கள் பெருமை கொண்டிருந்த காலம் உண்டு. இன்று, தன்னிடம் இருக்கும் ஆப்பிளை, ஆமைக்கு கொடுத்து மகிழும் சிம்பான்சியின் அன்பு, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகிறது.

மனிதர்களுக்கு மட்டுமே உண்டானதா என்ன பகிர்ந்து உண்பது? எங்களுக்கு உண்டு என்று சிம்பன்சி ஜோடி செய்யும் இந்த பாசப் பகிர்வு, இந்த வீடியோவை வைரலாக்குகிறது.

மேலும் படிக்க | ஹெல்மெட் ..கூலிங் கிளாஸூடன் ரைடிங் புறப்பட்ட நாய்; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News