COVID-19 குறித்து விழிப்புணர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள நிலையில், ஆந்திராவில் ஒரு காவலர் தேசமும், உலகமும் பெருமளவில் போராடும் எதிரிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க ஒரு புதிய வழியை வகுத்துள்ளார்.
கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, சப்-இன்ஸ்பெக்டர் மாருதி சங்கர் கர்னூல் மாவட்டத்தின் பியாபிலி நகரில் குதிரை சவாரி செய்துள்ளார். குதிரை சவாரி செய்வது ஆச்சரியம் இல்லை என்றாலும், அவர் தனது குதிரையின் மீது வரைந்திருந்த படங்கள் ஆச்சரியமான ஒன்றாக தான் உள்ளது.
வெள்ளை குதிரையில் உடல் முழுவதும் சிவப்பு வட்டங்கள் நிறைந்து காணப்பட்ட இந்த குதிரை தற்போது நாட்டு மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது. ஆம்., இந்த வட்டங்கள் வெறும் படங்கள் அல்ல, கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள்.
Andhra Pradesh: Sub Inspector Maruti Sankar, Peapally Mandal, Kurnool district rides a horse painted with images of #COVID19 virus, to create awareness among the public about the pandemic pic.twitter.com/xIFsktWahG
— ANI (@ANI) March 31, 2020
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மக்களை வற்புறுத்துவதற்காகவும் அந்தப் பகுதியின் குடியிருப்பு காலனிகளுக்கு வெளியே இந்த காவலர் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்ட குதிரையில் சவாரி செய்தார்.
நாடு தற்போது நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 21 நாள் முழு அடைப்பில் உள்ளது. இதனிடையே மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்த நாட்டு மக்களை காப்பாற்றும் முயற்சியில் மேற்கொண்டு வருகிறது. காவல்துறை மற்றும் மருத்துவ துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில், ஒரு உள்ளூர் கலைஞர் ஒரு காவல்துறை அதிகாரியுடன் இணைந்து ஒரு தனித்துவமான ‘கொரோனா’ ஹெல்மெட் தயாரித்து நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தார். அந்த வகையில் தற்போது ஆந்திராவில் காவலர் கொரோனா விழிப்புணர்வு குதிரையுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.