வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சமூக ஊடகங்களில் பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் நம்மால் நம்ப முடியாத அளவுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. சில வீடியோக்களில் விலங்குகளும் பறவைகளும் நமக்கு பாடம் கற்பிப்பது உண்டு.
அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு நமக்கும் நமது பொறுப்புகள் புரியத் துவங்கும். பூங்காவில் விழுந்த குப்பைகளை ஒரு காகம் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அது உண்மை. இந்த வீடியோ மூலம் உங்களுக்கு இதற்கான சான்றும் கிடைக்கும்.
காகம் மனிதர்களின் வேலையைச் செய்தது
வைரலாக பரவி புயலை கிளப்பி வரும் இந்த வீடியோவில் ஒரு பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகின்றது. காகம் வித்தியாசமான ஒரு விஷயத்தை செய்வதால் அனைவரும் காகத்தை வீடியோ எடுப்பதையும் வீடியோவில் காணலாம். காகம் பாட்டிலை வாயில் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவதை வீடியோவில் தெளிவாக பார்க்கிறோம். காகங்கள் இப்படி செய்வது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். இந்த வீடியோவைப் பார்த்த பின்னர், நீங்களும் இதுபோன்று சாலையிலோ அல்லது திறந்த வெளியிலோ குப்பைகளை வீசினால், இன்றிலிருந்தே உங்கள் பழக்கங்களை மேம்படுத்தி, உங்கள் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுவீர்கள் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க | வகுப்பறையில் இப்படியா? என்னடா படிக்க சொன்ன பேன் எடுத்துட்டு இருக்கீங்க: வைரல்
காகத்தின் மகத்தான மனதை காட்டும் வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ இணையத்தில் வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் vigliottijames என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த பறவைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்படுகின்றது என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ‘மனிதர்கள் போடும் குப்பைகளை அகற்ற ஒரு பறவைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால், அது மனிதர்களுக்கு அவமானம்’ என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘இந்த காகத்தை பார்த்து மனிதர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், ‘மனிதர்கள் வெட்கப்பட வேண்டும்’ என்று மனிதர்களை சாடியுள்ளார், ‘விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கையின் மீது இருக்கும் அக்கறை மனிதர்களாகிய நமக்கு இல்லை என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை’ என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ