டொனால்ட் ட்ரம்பின் அதிபர் நாற்காலிக்கு அவர் டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது. ஆனால், அவர் தற்போது வெள்ளை மாளிகையில் இருப்பது குறித்து பல நகைச்சுவைகளும் நையாண்டிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதில் ஒன்று தான்#DiaperDon. அவர் வெள்ளை மாளிகையில் (White House) இருந்து வெளியேறுவதற்கு முன்னரே நெட்டிசன்கள் அவரை நெட்டித் தள்ளிவிடுவார்கள் போலும்...
நன்றி தெரிவிப்பதற்கான சம்பிரதாயமான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட ‘முன்னாள்’ அதிபர் டிரம்ப், ஒரு சிறிய மேசைக்கு ‘பின்னால்’ அமர்ந்திருப்பதை நெட்டிசன்கள் பார்த்ததும், அவர்களுக்கு பழைய நினைவுகள் பொறிதட்டிவிட்டது. வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தும் மேசையை விட மிகச் சிறியதாக இருந்தது.
பிறகு என்ன? ட்ரம்பின் '#TinyDesk' மற்றும் ஒரு பொம்மை வீட்டில் கிடைத்த பிற மினியேச்சர் டெஸ்குகளை ஒப்பிட்டு மக்கள் குதூகலம் அடைகின்றனர்.
I'm loving these trump TinyDesk memes pic.twitter.com/dGZAetuhap
— Leona Lioness (LeonaLioness6) November 27, 2020
டிரம்ப்பை கேலி செய்ய சிலர் இருந்தால், பாவம் என்று அவருக்கு வக்காலத்து வாங்கவும் சிலர் இருக்க மாட்டார்களா என்ன? டிரம்ப் ஏன் சிரிய மேசையை ('tiny desk') தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பதை விளக்க முயன்றனர். எது எப்படியிருந்தாலும், , டிரம்ப் தனியாக மேஜையில் அமர்ந்திருக்கும்போது, வழக்கமாக அதிபர் அமரும் மேசை மற்றும் இதேபோன்ற அளவிலான மேசைகளில் அமர்ந்திருக்கும் வேறு சில உலகத் தலைவர்களின் படங்களை பதிவிடுகின்றனர்.
Just in time for Christmas! DiaperDon #tinydesk
(Who ever did this is my hero) pic.twitter.com/6nlHoJtdIw
— BLM (pattyburnett92) November 27, 2020
அமெரிக்கத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட டிரம்ப், ஊடகங்களை கேள்விகளைக் கேட்க அனுமதித்தார். நன்றி தெரிவிக்க நிருபர்களை சந்தித்திருந்தாலும், அவர் அமைதியாக இருந்திருப்பார் என்று சொல்லிவிட முடியவில்லை. வழக்கமாக டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்திப்பைப் போலவே இப்போதும் இருந்தது.
I really thought this was photoshopped. Someone on his team really hates him. tinydesk pic.twitter.com/B391BurTQI
— Who dis? (MizNikki) November 27, 2020
டொனால்ட் ட்ரம்ப் ஒரு உள்ளூர் நிருபரிடம் 'மரியாதை' கோரினார். ஆச்சரியமாக இருக்கிறதா? விஷயம் வேறொன்றுமில்லை. நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனை, டிரம்ப் ஒப்புக் கொள்ள விரும்புகிறாரா என்று அந்த நிருபர் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ச்சியான கேள்விகளால் கோபமடைந்த ட்ரம்ப், "நான் அமெரிக்காவின் ஜனாதிபதி. நாட்டு அதிபரிடம் மரியாதையாக பேசுங்கள்" என்று கூறினார்.
I fixed it, and at least this guy can read. tinydesk pic.twitter.com/D3IHtdDvkP
— Lorenzo The Cat (LorenzoTheCat) November 27, 2020
I see no difference tinydesk pic.twitter.com/6mRpPaIzaB
— morgan mayes (Morgan_Mayes) November 27, 2020
C'mon y'all. It's not unusual for the President to sign things at a TinyDesk. What's funny is no crowd. The small desk is there to make room for invited guests. TrumpTantrum #ByeDon pic.twitter.com/GKxZ9tJFKW
— Pierre Delecto’s Cow (DelectoCow) November 27, 2020
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் நடைபெறுவது வழக்கம். ஆண்டு விடுமுரைக்கு முன்னதாக அதிபர், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவது சம்பிரதாயமானது. இந்த சந்திப்பில், வந்திருக்கும் நிருபர்களின் கேள்விகளுக்கும் அதிபர்கள் சில சமயங்களில் பதிலளிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR