Elephant Puzzle: கூர்மையான பார்வை கொண்டவர்களை கழுகு பார்வை கொண்டவர்கள் எனக் கூறும் வழக்கம் உள்ளது. மேலும் கழுகு உலகிலேயே மிக வேகமாக வேட்டையாடுவதற்கும் பெயர் பெற்றது. சிறந்த வகையில் வேட்டையாடும் இந்த பறவையின் கண் பார்வை, மனிதர்களின் கண்களை விட எட்டு மடங்கு திறன் கொண்டது என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கழுகு 500 அடி உயரத்தில் இருந்து கூட சிறிய இரையை பார்த்து துல்லியமாக வேண்டையாட முடியும்.
வைரலாகும் யானைகளின் படம்
வைரலாகும் யானைகளின் புகைப்படம் இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஒருவர் சாதாரணமாக பார்க்கும் போது, 4 யானைகளை மட்டுமே பார்க்க முடியும். சிலருக்கு, 5 யானைகளை பார்க்க முடியும். ஆனாலும், பலரால், சரியான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை. படம் சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்ட பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பகிர்ந்துகொண்டு, படத்தில் எத்தனை யானைகள் உள்ளன என்று கேள்வியை கேட்டனர், ஆனால் கிட்டத்தட்ட அனைத்து மக்களும் தவறான பதிலையே கொடுத்தனர்.
ALSO READ | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!
It took nearly 1400 clicks in 20 odd minutes to get this perfect sync frame of 7 Elephants quenching their thirst. CAN YOU SEE ALL 7#canonphotography @Canon_India @PMOIndia @moefcc pic.twitter.com/51WKgBqQBs
— WildLense® Eco Foundation (@WildLense_India) January 19, 2022
— WildLense® Eco Foundation (@WildLense_India) January 20, 2022
யானைகள் தண்ணீர் குடிக்கும் போது எடுத்த படம்
இந்த படத்தை எடுக்க, புகைப்படக்காரர் 1400 படங்களை கிளிக் செய்ய வேண்டி இருந்தது என கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். யானைகள் தண்ணீர் குடிக்கும் போது புகைப்படக்காரர் இந்த படத்தை எடுத்துள்ளார். புகைப்படக் கலைஞர் படத்தில் காணப்படும் யானைகளின் சரியான எண்ணிக்கையை கண்டறிய உதவும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் யானைகளின் சரியான எண்ணிக்கை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் வீடியோவைப் பார்க்க வேண்டும். இந்த வீடியோவை 'Wildlens India' ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. படத்தில் 7 யானைகள் இருப்பதை இது காட்டுகிறது. மீதமுள்ள யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக மறைந்திருக்கும் நிலையில் புகைப்படக் கலைஞர் படம் எடுத்துள்ளார்.
ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR