ராட்சத மலைப்பாம்பை ஒரே நொடியில் விழுங்கிய சிறிய ராஜ நாகம்:திக் திக் வீடியோ

இரண்டு பாம்புகள் இருப்பதை நாம் காணலாம். இதில் ஒன்று கோல்டன் கலர் நாகப்பாம்பு, மற்றொன்று மலைப்பாம்பு ஆகும். இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 27, 2023, 04:12 PM IST
  • பாம்பு மற்றொரு பாம்பை விழுங்கும் அரிய காட்சி.
  • இன்றைய வைரல் வீடியோ.
ராட்சத மலைப்பாம்பை ஒரே நொடியில் விழுங்கிய சிறிய ராஜ நாகம்:திக் திக் வீடியோ title=

இராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினாலான பட்டைகளுடன் காணப்படுகின்றன. இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. மற்ற பாம்புகளை போலவே இவற்றிற்கும் நான்கு புறமும் வாய்த்தசைகள் விரியும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன. மேலும் இதன் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் நாள் முழுவதும் வேட்டையாடும் இவற்றை, இரவில் காண்பது அரிது.

அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் இரண்டு பாம்புகள் இருப்பதை நாம் காணலாம். இதில் ஒன்று கோல்டன் கலர் நாகப்பாம்பு, அதன் அளவு 6 அடி இருக்கும் போல் தெரிகிறது. மற்றொன்று மலைப்பாம்பு. இதில் மலைப்பாம்பின் நீளம் 12 அடி இருக்கும். 

மேலும் படிக்க | தீ கூட அசால்டாக விளையாடிய இளைஞர்களுக்கு தீஞ்சுபோன முகம்: வைரல் வீடியோ

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வைரல் வீடியோவில், நாகப்பாம்பு ஒன்று ஆக்ரோஷத்துடன் தன்னோடு பெரிய சைஸ் கொண்ட மலைப்பாம்பை வேட்டையாடுகிறது. தன்னை காப்பாறிக்க முடியாமல் தவித்த அந்த மலைப்பாம்பு, நாகப்பாம்பிற்கு இரையாகி விடுகிறது. மேலும் அதை ஒரே நொடியில் விழுங்குவதையும் நாம் வீடியோவில் காண முடிகிறது. இது போன்ற வீடியோவை கட்டாயம் இதற்கு முன்னால் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். மேலும் இந்த வீடியோ முழுமையாக நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்:

கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ Manda petualang என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

இந்த மஞ்சள் நிற நாகப்பாம்பின் அறிவியல் பெயர் நஜா நிவியா ஆகும். இது மிகவும் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு இனமாகும்.

மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் தந்தூரி ரொட்டி: கலக்கும் இளைஞன், பாராட்டும் நெட்டிசன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News