கொளுந்தனுடன் நடனத்தில் வெளுத்து வாங்கும் மணப்பெண்: மணமகனின் ரியாக்‌ஷன் சூப்பர்

Bride Dance with Brother-in-law Viral Video: திருமண மேடையில் மணமகனை விட்டுவிட்டு கொளுந்தனுடன் நடனமாடும் மணப்பெண்ணின் வீடியோ வைரலாகிறது. அதற்கு மணமகனின் ரியாக்‌ஷன் அதைவிட சூப்பர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 28, 2022, 01:33 PM IST
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் அண்ணி-கொளுந்தன் வீடியோ
  • வாழ்த்துவதற்கான புதிய வழி
  • வாழ்த்தை ஏற்றுக் கொள்ளும் நவீன அண்ணி வீடியோ வைரல்
கொளுந்தனுடன் நடனத்தில் வெளுத்து வாங்கும் மணப்பெண்: மணமகனின் ரியாக்‌ஷன் சூப்பர் title=

Viral Video: திருமண மேடையில் மணமகனை விட்டுவிட்டு கொளுந்தனுடன் நடனமாடும் மணப்பெண்ணின் வீடியோ வைரலாகிறது. திருமண சீசனில் இதுபோன்ற வீடியோக்கள் ஆயிரக்கணக்கில் பகிரப்படுகின்றன. அதில் சில மட்டுமே வைரலாகின்றன. இந்த வீடியோவில், தனது சகோதரருடன் நடனமாடும் மணமகளை பார்க்கும் மணமகனின் ரியாக்‌ஷன் சூப்பராக இருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வைரலாகி பலரால் பார்க்கப்படுகிறது.

இதில் அனைவரும் நடனமாடும் பெண் மற்றும் கொளுந்தனின் நடனத்தை ரசிப்பது போல, மணமகனின் ரியாக்ஷனும் மிகவும் பாராட்டப்படுகிறது. இப்படியொரு வீடியோவையும் திருமண நடனத்தையும் யாருமே பார்த்திருக்க முடியாது.

மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ 

திருமண வரவேற்பின்போது, திடீரென குதித்து மேடையை அடைந்தார் மணமகனின் சகோதரர். மணமகள் மற்றும் மைத்துனர்களின் நடனம் தொடர்பான காணொளி, இதனை பார்த்த மாப்பிள்ளை கூட அதிர்ந்து போகும் வகையில் இருவரும் நடனமாடியுள்ளனர். வீடியோ மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறதா இல்லையா? நீங்களே பார்த்து சொல்லுங்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WedAbout.com (@wedabout)

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவின் தொடக்கத்தில் மணமக்கள் மேடையில் வசதியாக அமர்ந்திருப்பதை காணமுடிகிறது. திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க விருந்தினர்கள் வருகிறார்கள்.

அப்போது மைத்துனரும் திடீரென துள்ளிக் குதித்து மேடையை அடைந்து மணமக்களை வாழ்த்தினார். அவர் வாழ்த்து வெறும் வாயால் சொல்லப்பட்ட வாழ்த்து அல்ல, நடனத்தால் சொல்லப்பட்ட வித்தியாசமான வாழ்த்து.

மேலும் படிக்க | ‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை

மணமகனின் சகோதரர் மேடைக்கு வந்தவுடனேயே பின்னணியில் ஹிந்திப் படத்தின் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் ஒலிக்கத் தொடங்கிய உடன், அண்ணியின் கையைப் பிடித்த மாப்பிள்ளையின் சகோதரர் நடனமாடத் தொடங்கிவிட்டார்.

இதைத் தொடர்ந்து இருவரும் மாப்பிள்ளையை வேடிக்கை பார்க்கச் செய்துவிட்டு தொடர்ந்து நடனமாடிக் கொண்டு இருந்தனர்.

திருமணத்தில் மைத்துனர் நடனம் ஆடும் இந்த வீடியோவை நெட்டிசன்களும் பெரிதும் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலும் wedabout என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இது இதுவரை ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் பார்வைகளையும் பெற்றுள்ளது.

இந்த வேடிக்கையான வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பலவிதமான கமெண்டுகள் வந்தாலும், “ ஆஹா வாட் எ டான்ஸ்” என்ற கமெண்டே அனைவருக்கும் ஒரு முறையாவது மனதில் தோன்றும் எண்ணமாக இருக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News