Wild Animal Fight Video: காட்டு ராஜா என்றாலும் அதற்கும் எதிரிகளும் இருப்பார்கள் தானே? சிங்கங்கள் காட்டை ஆளுகின்றன, வலிமையான இந்த சிங்க ராஜா அல்லது ராணியின் முன் வேறு எந்த விலங்குகளும் நிற்க முடியாது என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் யானையுடன் சண்டையிட்டால், சிங்கங்கள் ஜெயிக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால், காட்டுக்கே ராணின்னாலும் எங்களிடம் இருந்து தப்ப முடியாது என்று ரவுடி பேபிகள் போல் சிங்கத்தை சீண்டும் ஹைனாக்களின் வீடியோ ஆச்சரியம் அளிக்கிறது.
சிங்கம் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதை இது வரை பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த வீடியோவில் ஹைனாக்களின் கூட்டம் சிங்கத்தை சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
மேலும் படிக்க | Viral Video: முதல் முதலாக தண்ணீரை கண்டு குதூகலிக்கும் குட்டி யானை!
சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வரும் காட்டு விலங்கு தொடர்பான காணொளியில் சிங்கம் காட்டில் இரை தேடுவதை காணமுடிகிறது. ஒரு கட்டத்தில் சோர்வடைந்து ஒரு இடத்தில் அமர்ந்தால், ஹைனாக்களின் கூட்டம் வந்து சிங்க ராணியை சூழ்ந்து கொள்கின்றன.
திட்டமிட்டு கச்சிதமாக ஜோலியை முடிக்கும் திறன் கொண்ட ஹைனாக்கள், சிங்கத்தை நாலாபுறமும் சுற்றி வளைத்தன. எதிரிகள் தாக்கினால், சிங்கப் பெண் சும்மா இருப்பாரா? பதிலுக்கு தாக்கினாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்துப் போகிறது பெண் சிங்கம்.
ஒண்டிக்கு ஒண்டியா வா என்று சொல்வது, சவால் விடுவதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில் பெண் சிங்கம் உயிர் பிழைப்பது கூட கடினம் என்று தோன்றியது. இதை புரிந்துக் கொண்ட பெண் சிங்கம் காட்டுக்குள் ஓடியது. ஆனால் ஹைனாக்கள் சிங்கத்தை துரத்துவதை நிறுத்தவில்லை.
சிங்கம் மற்றும் ஹைனாவின் சண்டையை இங்கே பாருங்கள்
சிங்கத்துக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று கழுதைப்புலிகள் முடிவு செய்துவிட்டன போலிருக்கிறது. காட்டு விலங்கு தொடர்பான இந்த வீடியோ, லேட்டஸ்ட் சைட்டிங்ஸ் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
விலங்குகளுக்குச் சிம்மசொப்பனமாக இருக்கும் ஹைனாக்கள் என்னும் கழுதைப்புலிகள், சூழ்ச்சியாக வேட்டையாடுகிற தன்மை கொண்டவை. சிங்கம் நிம்மதியா வாழணும்னாலும் அதை நாங்க தான் முடிவு பண்ணணும் என்று சொல்வதுபோல இந்த கழுதைப் புலிகளின் அட்டாக் இருக்கிறது.
காட்டு வாழ்க்கையில் சிங்கமும் கழுதைப்புலிகளும் ஒரே எல்லைக்குள் வாழ்கின்றன. உணவுக்காக இரண்டு விலங்கினங்களுமே எப்போதும் மோதிக் கொள்கின்றன. அதனால்தான் இரு விலங்குகளும் எதிரியின் குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன. கழுதைப்புலிகளிடம் சிங்கக் குட்டிகள் கிடைத்துவிட்டால் சின்னாபின்னமாக்கிவிடும்.
மேலும் படிக்க | இரண்டு சிங்கங்களின் வேட்டையில் சிக்கிய இளைஞர் - அடுத்து என்ன நடந்தது? வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ