வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் திருமணம் தொடர்பான வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிரார்கள். நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.
சமீபத்தில் ஒரு திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இது பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது. இதில் திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே மாப்பிள்ளை தன் பிடிவாத குணத்தை காட்டுகிறார். அவர் அனைவர் முன்னிலையிலும் இப்படி செய்வார் என அந்த மணப்பெண் கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார்.
மேடையில் நடந்த வினோத சம்பவம்
வைரல் ஆகி வரும் சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், மணமக்கள் மேடையில் இருப்பதைக் காண முடிகின்றது. அவர்களைப் பார்த்தால், திருமணம் தொடர்பான சடங்குகள் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், மேடையிலேயே மற்றொரு சடங்கு செய்யப்படுகிறது. இதில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் அதற்குள் மணமகள் நினைத்திருக்காத ஒன்று நடந்து விடுகிறது.
வீடியோவில் மணமகனுன் மணமகளும் மேடையில் எதிரெதிரே நிற்பதைக் காண முடிகின்றது. அப்போது ஒரு பெண் இனிப்புகளுடன் அருகில் நின்று கொண்டிருக்கிறாள். பின்னர் மணமகள் தட்டில் இருந்த இனிப்புகளை எடுத்து மணமகனுக்கு ஊட்டினார். மணமகன் மிகுந்த அன்புடன் வாயைத் திறந்து பாதி ஸ்வீட்டைச் சாப்பிட்டுவிட்டு பாதி இனிப்புத் துண்டைக் கையில் பிடித்தார். இப்போது மணமகனும் அதே இனிப்பை மணமகளுக்கு ஊட்டுவதற்காக மணமகளை நோக்கி கையை நீட்டுகிறார். ஆனால் மணப்பெண் மறுத்துவிட்டு, தட்டில் இருந்து மற்றொரு இனிப்பு ஊட்டச் சொல்கிறார்.
மேலும் படிக்க | சுற்றி 4 குரங்குகள், கூலா விளையாடும் குட்டிப்பெண்: உருகும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
கட்டாயப்படுத்திய மணமகன்
இதற்குப் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகளை பார்த்தால் நம்மால் நம்ப முடியவில்லை. மணமகள், மணமகன் சாப்பிட்டு எச்சில் செய்த இனிப்புகளை சாப்பிட மறுத்ததால், மணமகன் கோவம் கொண்டு கட்டாயப்படுத்து அதை அவருக்கு ஊட்டி விட்டார். மணப்பெண்ணின் வாயைப் பிடித்து வலுக்கட்டாயமாக தான் சாப்பிட்ட இனிப்பின் மீதி பாதியை ஊட்டினார். மணமகனின் இத்தகைய நடத்தை மணமகளுக்கு பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேடையிலேயே கோவப்பட்ட மணமகனின் வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ வைரல் ஆனது:
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். ‘இது என்ன கொடுமை.. பெண் தன் விருப்பத்தை கூறி மணமகனின் செயலுக்கு மறுப்பு தெரிவித்ததை பாராட்ட வேண்டும்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | மரத்தின் மேல் விறுவிறுவென்று ஏறி பறவையை பதம் பார்த்த விஷப்பாம்பு: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ