கலிகாலம் தான்... எலும்பை மென்று சாப்பிடும் ஒட்டகசிவிங்கி... அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

Viral Video of Giraffe: நேற்று, மான் பாம்பை மென்று சாப்பிடும் வீடியோ வைரலான நிலையில், இன்று ஒட்டக சிவிங்கி ஒன்று எலும்பை மென்று சாப்பிடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2023, 11:39 AM IST
  • ஒட்டகச்சிவிங்கிகள் புல்வெளிகளிலும் திறந்த காடுகளிலும் வாழ்கின்றன.
  • வைரலாகும் ஒட்டகசிவிங்கி வீடியோ.
  • ஒட்டகச்சிவிங்கி எலும்பை மெல்லுவதைப் பார்த்து பலர் தூக்கத்தை இழந்தனர்.
கலிகாலம் தான்... எலும்பை மென்று சாப்பிடும் ஒட்டகசிவிங்கி... அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!  title=

எலும்பு மெல்லும் ஒட்டகச்சிவிங்கி வீடியோ: இயற்கை அழகானது மற்றும் அற்புதமானது. இயற்கையை ஆராய்வது அறிவுக்கு வழிவகுக்கும் மற்றும் இயற்கையைப் பற்றி அதிகம் தெரியாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். சில நாட்களுக்கு முன், மான் ஒன்று பாம்பை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் பரபரப்பானது. இந்நிலையில் தற்போது ஒட்டகச்சிவிங்கி எலும்புகளை மெல்லும் வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மான்களைப் போலவே, ஒட்டகச்சிவிங்கிகளும் சைவ விலங்குகள். உலகின் மிக உயரமான பாலூட்டியான, ஒட்டக சிவிங்கி பெரும்பாலும் தென்னாப்பிரிக்காவில் காணப்படுகின்றன. நீளமான கழுத்து, சாய்வான முதுகு மற்றும் குட்டையான கொம்புகள் ஆகியவற்றால் அவை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. 

ஒட்டகச்சிவிங்கி எலும்பை மெல்லுவதைப் பார்த்து பலர் தூக்கத்தை இழந்தனர்

ஒட்டகச்சிவிங்கிகள் புல்வெளிகளிலும் திறந்த காடுகளிலும் வாழ்கின்றன. அவை இலைகள், விதைகள், பழங்கள், மொட்டுகள் மற்றும் கிளைகளை உண்கின்றன, மேலும் அவற்றின் நீண்ட கழுத்து உயரமான மரங்களிலிருந்து உணவைப் பெற உதவுகிறது. இருப்பினும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் ஒட்டகச்சிவிங்கி எலும்புத் துண்டை மெல்லுவதைக் காட்டுகிறது. நேற்று, புல்லை சாப்பிடும் மான் ஒன்று பாம்பை மெல்லும் வீடியோ வைரலான நிலையில், இன்று இந்த வீடியோ வெளியாகியுள்ளதால், மக்கள் காட்டு விலங்குகளுக்கு என்ன ஆயிற்று என கவலையுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய வனச் சேவை (IFS) அதிகாரி சுஷாந்த் நந்தா, வீடியோவைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.   மான் வீடியோவை அவர் நேற்று பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Viral Video: கலிகாலம் என்றால் இது தானோ... பாம்பை சுவைத்து சாப்பிடும் மான்!

வைரலாகும் ஒட்டகசிவிங்கி வீடியோ:

வனனத்துறை அதிகாரி தனது பதிவில், “ஒட்டகச்சிவிங்கிகள் தாவரவகைகளை உண்ணும் உயிரினங்கள் மற்றும் உயரமான மரங்களின் இலைகள் மற்றும் மொட்டுகளை அடைய அவற்றின் நீண்ட கழுத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால், பாஸ்பரஸ் சத்து பாற்றாக்குறை ஏற்பட்டால் பெற எலும்புகளை சாப்பிடுகின்றன. இயற்கை உண்ஐயில் அதிசயமானது தான்” என பதிவிட்டுள்ளார்.

வைரலாகும்  வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள்

இதற்கிடையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, நெட்டிசன்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். இதுபோன்ற அரிய தகவல் தரும் வீடியோவைப் பகிர்ந்ததற்காக IFS அதிகாரிக்கு நன்றி தெரிவித்தனர். ஒரு பயனர், 'சிறந்த வீடியோ - நான் புதிதான ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். நன்றி." என பதிவிட்டுள்ளார். நேற்று மான் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், மான்கள் தாவரங்களை உண்டு வாழ்பவை என்றாலும், அதற்உ சில சத்து குறைபாடும் ஏற்படும் போது, அசைவ உணவுகளை தேடி சாப்பிடுகின்றன என நிபுணர்கள் விளக்கம் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையின் அதிசயங்களையும், அதிலுள்ள பல மர்மங்களையும் நாம் அறிந்தது மிகவும் குறைவு தான். நமக்கு தெரியாத விஷயங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய சூழ்நிலையில், சமூக ஊடகங்கள் உண்மையில் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. 

மேலும் படிக்க | Viral Video: குட்டி யானைக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்...!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News