ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று கூறப்படுகிறது. அனைத்து அரசு வசதிகளையும் பயன்படுத்த UIDAI வழங்கும் ஆதார் அட்டை கட்டாயமாகும். அனைத்து குடிமக்களுக்கும் பயோமெட்ரிக் தனித்துவ அடையாள அட்டையான ஆதார் கார்டை வழங்குவதற்காக அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
ஆனால் சில குடிமக்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் ஆதார் அட்டை அனைவருக்கும் கிடைக்கவில்லை. இருந்தாலும், உரிய ஆவண சான்று இல்லாதவர்களும் ஆதார் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை அரசு செய்துள்ளது.
ஆதார் அட்டை தேவையா இல்லையா என்ற வாத விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது.
ஆதார் அட்டையின் பயன்பாடு எங்கு தேவை, ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆதார் அட்டை, விவாதங்களுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக கடவுள் காளி தேவிக்கு ஆதார் அட்டை கொடுக்கப்பட்டது சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.
காளிதேவிக்கு ஆதார் அட்டையை கொடுத்ததைத் தொடர்ந்து சாமிகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது கட்டாயமாக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. காளியின் கைரேகை மற்றும் கண் ரெட்டினா பதிவை எப்படி எடுத்தார்கள்? என்றும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
காளி தேவிக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையின் மிகப் பெரிய சுவரொட்டியும் வைரலாகிறது. அந்த ஆதார் அட்டையில், காளி தேவியின் முகவரியாக 'கைலாய பர்வதம்' (Mount Kailash Address) குறிப்பிடப்பட்டுள்ளது. பின்கோடு 0000001 என்றும் இருக்கிறது.
ஜம்போ ஆதார் அட்டையில் “மா காளி” என்ற பெயர் உள்ளது, அதில் கணவரின் பெயர் “மகாதேவ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, அன்னை காளியின் பிறந்தநாள் “01/01/4004” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Is this aadhar linked to PAN?
Maa Kali will now start receiving calls for loan offers..#KaliPuja pic.twitter.com/ChkH1PfEEj
— SHIKHA (@Shikha__Rawat) November 7, 2021
சரி, கணவரின் முகவரியும், மனைவியும் முகவரியும் ஒன்றாகத் தானே இருக்கும்? சிவன் மற்றும் பார்வதியின் முழு முகவரி: “கைலாஷ் பர்பத், மேல் தளம், மானசரோவர் ஏரிக்கு அருகில், பின்கோடு 0000001”. ஆதார் பதிவு எண், ஆதார் எண் (Adhaar Card), QR குறியீடு என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சீனாவில் இருக்கும் கைலாசத்தை எப்படி இந்திய முகவரியாக குறிப்பிட முடியும்?
சீனாவில் வசிப்பவர்களுக்கு ஆதார் அட்டை கொடுக்க சீன அதிகாரிகள் எப்போது சம்மதித்தார்கள்? என்றும் பலர் கேள்விகளை எழுப்புகின்றனர். அது சரி, இனி எல்லா சாமிகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது கட்டாயமாக்கப்படுமா? என்றும் சிலர் நையாண்டியாக கேட்கின்றனர்.
இது கொல்கத்தாவின் பூஜை கொண்டாட்டங்களின் பந்தல் அலங்காரமாக இருந்தால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்றும் கேட்கப்படுகிறது.
Also Read | எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் ஆதார் அட்டை செய்வது எப்படி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR