Viral Video Of A Romantic Reels Couple Doing Stunts : கடந்த சில வருடங்களாகவே, சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. இதில் வைரலாகுபவர்களும் கூடிய விரைவில் செலிப்ரிட்டி ஆகிவிடுகின்றனர். இவர்களை பின்பற்றி, பலரும் அதே போல அல்லது அதைவிட ஆபத்தான் ரீல்ஸ்களை செய்து வருகின்றனர். அதில் ஒரு சில வீடியோக்கள் சட்டத்திற்கு புறம்பானதாகவும், இன்னும் சில வீடியோக்கள் பிறரை தீய வழிக்கு அழைப்பதாகவும் உள்ளன. அப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்று குறித்துதான், நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.
வைரல் வீடியோ:
பிற தகவல்களின் அடிப்படையில் இந்த வீடியோ கான்பூர் நகரில் உள்ள ஒரு இடத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், முதலில் ஒரு நபர் தனது கேர்ள் ஃப்ரெண்டை பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்கிறார். முத்தம், கொஞ்சல் என இவர்களின் ரொமான்ஸ் அப்படியே தொடர்கிறது. இதையடுத்து, அந்த நபர் அப்பெண்மணியை பைக்கில் அமர வைத்தவாரே பைக்கை கிளப்பிக்கொண்டு செல்கிறார். இதில் அந்த பெண்ணும் பின்னால் வந்து அமரவில்லை, பைக் ஓட்டும் நபரும் ஹெல்மெட் அணியவில்லை.
Reel जो न कराए.... कानपुर में चलती बाइक पर रोमांस हो रहा है. बाइक की टंकी पर बैठी लड़की गले में बाहें डालकर झूम रही है. pic.twitter.com/bOMWfzi20w
— बलिया वाले 2.0 (@balliawalebaba) January 11, 2025
போலீஸ் வலையில் காதல் ஜோடி:
இந்த ரீல்ஸ் ஜோடியின் வீடியோ, இணையத்தில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. இவர்கள், சாலை விதிகளை மதிக்காமல் இப்படி பாட்டுக்கு ரீல்ஸ் செய்வதை பலரும் கண்டிக்க ஆரம்பித்தனர். இந்த வீடியோ, கான்பூர் நகர போலீஸாரின் கண்களிலும் சிக்கியுள்ளது. இவர்கள், இந்த பிரச்சனையை தாங்களே கையில் எடுத்து, இந்த ஜோடி யார் என்பதை தேடி இருக்கின்றனர்.
ரீல்ஸ் செய்த அந்த நபரை ஒருவழியாக கண்டுபிடித்து அவர் ஏற்கனவே இது போல பல சாலை விதிமுறைகளில் ஈடுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து அவர் பெயரில் 10 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! மனிதர்களை வேட்டையாட முதலைகளின் புது டெக்னிக் - வைரல் வீடியோ உண்மையா?
மேலும் படிக்க | ஒரே வீடியோவில் ஃபேமஸான “க்ளூக்ளோஸ் பொடி” சிறுவன்! வைரல் ரீல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ