Tiger Viral Video: புலி என்பது மிகவும் கம்பீரமான, வலிமையான மிருகம் ஆகும். காட்டில் மற்ற உயிரினங்களை விட வேட்டையிலும், நடையிலும், தோரணையிலும் புலி மிகவும் வித்தியாசமானது எனலாம். அதன் நீண்ட பலம் கொண்ட உடல், கூரிய பற்களும் நகங்களும் பார்த்தாலே பயணத்தை கொடுக்கும். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் புலி ஒன்று வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது நெட்டிசன்களிடம் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
பாகிஸ்தானில் ஒரு நபர் புலியை இரும்பு சங்கிலியால் கட்டி அதனை நாயை அழைத்துச்செல்வது போன்று இழுத்துச் செல்கிறார். அதுமட்டுமின்றி, குதிரையின் முதுகில் ஏறி அமர்ந்து செல்வது போன்று அந்த புலியின் முதுகில் ஏறி அமர்ந்து செல்கிறார். இருப்பினும் அந்த புலி நிதானமாக அவரது கட்டுபாட்டில் இருப்பது தெரிந்தாலும், புலியை இப்படி கொடுமைப்படுத்துவது தவறு என நெட்டிசன்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோவை பாகிஸ்தானின் டிஜிட்டல் கிரியேட்டர் நௌமன் ஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட சில நாள்களிலேயே லட்சக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும், தொடர்ந்து பலரும் பல்வேறு சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வீடு வீடாக உணவு டெலிவரி செய்யும் Zomato CEO மற்றும் அவரது மனைவி!
திறந்தவெளி ஒன்றில் கூண்டுகள் சூழ, ஹாசன் ஒரு புலியின் அமர்ந்து செல்வது வீடியோவில் காண முடிகிறது. அந்த புலியின் பின்புறத்தில் இரண்டு கூண்டுகளை பார்க்க முடிகிறது. ஒரு கூண்டில் ஆண் சிங்கமும், மற்றொரு கூண்டில் பெண் சிங்கமும் இருப்பதை காண முடிகிறது. இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டாலும் அந்த நபரையும் விமர்சித்து வருகின்றனர்.
இது நிச்சயம் ஏற்க முடியாத ஒன்று என்றும் புலிக்கு அளிக்கப்படும் அநீதி என்றும் விமர்சித்திருந்தனர். இது ஆபத்து என்றும் சிலர் அவரை எச்சரித்து தங்களின் கடுமையான கண்டனங்களையும் சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்துவருகின்றனர். கமெண்டில் ஒரு பதிவர்,"இது பல்வேறு தளங்களில் மிகவும் தவறான ஒன்றாகும். புலிகள் ஒன்றும் பொம்மை இல்லை" என குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பதிவர்,"ஒரு கம்பீரமான விலங்கை சங்கிலியால் கட்டி பொழுதுபோக்கு பயன்படுத்துகிறார் என்றால் இவர் என்ன மனநிலையில் உள்ளார்" என கடுமையாக சீறி உள்ளார்.
விலங்குகள் நலம் மீது ஆர்வம் கொண்ட ஒரு பதிவர்,"அந்த புலி மிகவும் பாவமாக உதவியேதுமற்று காணப்படுகிறது. இது விலங்குகளுக்கு அளிக்கப்படும் அப்பட்டமான கொடுமையாகும்" என பதிவிட்டுள்ளார். மற்றொருவர்,"இது சட்டவிரோதம் இல்லையா...? இதுபோன்ற நடப்பதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்" எனவும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | காக்காவை அந்தரத்திலேயே வேட்டையாடிய பாம்பு... ஷாக் ஆக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ