நடிகர் ராணா டகுபதிக்கு காதலி மிஹீகா பஜாஜுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது!

பூட்டுதலுக்கு மத்தியில் ராணா டகுபதி காதலி மிஹீகா பஜாஜுடன் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், விழாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!

Last Updated : May 21, 2020, 01:51 PM IST
நடிகர் ராணா டகுபதிக்கு காதலி மிஹீகா பஜாஜுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது! title=

பூட்டுதலுக்கு மத்தியில் ராணா டகுபதி காதலி மிஹீகா பஜாஜுடன் அதிகாரப்பூர்வமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், விழாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி. இவர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். நடிகை த்ரிஷாவை காதலித்து வந்த இவர் பின்னர் இவர்களுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பெண் தொழில் அதிபர் ஒருவர் தன் காதலை ஏற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது இவர்களுக்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு ராணா இதனை அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

Trending News