பால்கனியில் குழுவாக நிற்கும் பெண்கள் நிர்வாணமாக நின்று போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வைரலாகின்றன.
பெண்கள் நிர்வாணமாக நிற்கும் பால்கனிக்கு அருகிலுள்ள கட்டடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அடுத்த கட்டடத்தில் உள்ள பால்கனியில் இருந்து இந்த நிர்வாண கோலாகலத்தைப் பார்த்த ஆண் ஒருவர் இந்த சந்தர்ப்பத்தை கைவிடாமல், புகைப்படங்களாக்கிவிட்டார்.
இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் எடுக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Also Read | உங்களிடம் இந்த ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? இதோ 10 கோடி பிடியுங்கள் கோடீஸ்வரரே!
அருகிலுள்ள கட்டிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட காட்சிகள், பெண்கள் நிர்வாணமாக நிற்பதை அப்பட்டமாக காட்டுகிறது.
"அநாகரீக வீடியோவில் தோன்றிய பெண்களை" பொது அவதூறு (public debauchery) குற்றச்சாட்டில் துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு ஊடகமான தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள் விளம்பர ஸ்டண்டிற்காக பால்கனியில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (Muslim-majority UAE) அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பொது இடங்களில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது போன்ற பல தடை செய்யப்பட்ட பழக்கவழக்கங்களுக்காக மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் பெண்கள் எப்படி தைரியமாக நிர்வாண போஸ் கொடுத்தனர் என்பதும், அதுவும் இது திட்டமிடாமல் செய்யப்பட்டிருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது.
"இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் சமுதாயத்தின் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை" என்று துபாய் போலீசார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை அறிவுறுத்துகிறது.
Also Read | ஆளுமைகளாய் தோன்றி வாக்கு சேகரிக்கும் கலைஞர்களின் மறக்கப்படும் உண்மை முகங்கள்
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது ஒழுக்க சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் சுமார் £ 1,000 அபராதமும் விதிக்கப்படும்.
மத்திய கிழக்கு அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் தாராளமயமானது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் சமூக ஊடகங்களில் இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் வெளியாகும்ம்போது அதை எதிர்கொள்ள கடுமையான சட்டங்களையும் அமீரகம் வைத்துள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | சரித்திரத்தில் April 04ஆம் தேதி முக்கிய சம்பவங்கள் சொல்லும் செய்திகள் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR