சென்னை: சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிவில் இன்ஜினியரான ஜஸ்வந்த் சிங்குக்கு ஒரு சுவாரஸ்யமான யோசனை தோன்றியது. திருக்குறளின் 1,330 குறள்களையும் பனை ஓலைகளில் பொறிக்க அவர் எண்ணம் பூண்டார்.
இன்றைய தலைமுறையினரிடையே திருக்குறளை ஊக்குவிப்பதே அவரது நோக்கமாகும். சில நாட்களுக்கு முன்பு, ஜஸ்வந்த் தனது பணியை முடித்து விட்டார். தனது பணியால் மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கும் ஜஸ்வந்த் சிங், "புனித புத்தகங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகம் / மதத்தைப் பற்றி பேசுகின்றன. ஆனால் திருக்குறள் சாதி, மதம் மற்றும் தேசியத்தை மீறிய பல விஷயங்களைப் பற்றி கூறுகிறது. இது மதச்சார்பற்ற நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கநெறிகள் குறித்து எழுதப்பட்ட மிகப் பெரிய படைப்புகளில் ஒன்றாகும். திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள், உலகெங்கிலும் உள்ள அறிஞர்களால் போற்றப்பட்ட ஒரே உரையகும்.
இது இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், 1,330 குறள்களும் இன்றும் பொருத்தும் வகையில் உள்ளன. ஆனால் மனிதகுலத்திற்கு பயனளிப்பதற்காக எழுதப்பட்ட இந்த குரல்களின் முக்கியத்துவம் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. நான் திருவள்ளுவரின் (Thiruvalluvar) மிகப்பெரிய அபிமானி. அவருடைய போதனைகளை முடிந்தவரை பலருக்கு கொண்டு செல்ல விரும்பினேன். பனை ஓலைகளில் 1,330 குறல்களையும் பொறிப்பது என் தரப்பில் நான் மேற்கொண்ட ஒரு சிறிய பணித்திட்டமாகும்” என்றார்.
ALSO READ: தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க டெல்லியில் தமிழ் அகாடமி: மனீஷ் சிசோடியா
குறள்களை பொறிக்க அவர் ஒரு எழுத்தாணியைப் பயன்படுத்தினார். "2020 ஆண்டில் விதிக்கப்பட்ட லாக்டௌன் எனக்கு ஒரு விதத்தில் ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. இந்த திட்டத்தை முடிக்க நான் அந்த நேரத்தை பயன்படுத்தினேன். பனை ஓலைகளில் செதுக்குவது எளிதல்ல. அதற்கு அதிக பயிற்சியும் தேவை, அதிக பொறுமையும் தேவை. நான் இவ்வாறு செய்ய மற்றொரு காரணம் என்னவென்றால், பனை ஓலைகளில் இந்த திருக்குறளைப் பாதுகாக்க நான் விரும்பினேன். இந்த பனை ஓலைகளை பல தலைமுறைகளுக்குக் கொடுக்க முடியும். குறைந்த ஆயுள் கொண்ட காகிதத்தைப் போலன்றி, பனை ஓலைகளை 700 ஆண்டுகளுக்கு பாதுகாக்க முடியும்" என்று ஜஸ்வந்த் சிங் விளக்கினார்.
பனை ஓலைகளை எழுதுவதற்கு ஏற்றதாக்க, ஜஸ்வந்த் பனை ஓலைகளை மசாலா பொருட்கள் மற்றும் பப்பாளி இலைகளுடன் கலந்து குரல்களை பொறிக்க ஒரு எழுத்தாணியைப் பயன்படுத்தினார். குறள்களை பனை ஓலைகளில் எழுதிய பிறகு, அவர் எழுதிய எழுத்துக்கள் அவற்றில் தெரியவில்லை. ஆகையால், அவர் கரிசலாங்கண்ணி கீரையைப் பயன்படுத்தி ஒரு பசையை செய்தார். கீரை இலைகளை உலர்த்தி, பின்னர் அவற்றை கற்பூரம் கொண்டு எரித்தார். பின்னர், சாம்பல் மற்றும் எலுமிச்சை எண்ணெயை கலந்து அதை மென்மையான பசையாக மாற்றினார். எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய அந்த பசையை பனை ஓலையில் தடவினார். இந்த வழியில், பனை ஓலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.
தமிழகத்தில் (Tamil Nadu) வசிக்கும் இயற்கை ஆர்வலரான ஜஸ்வந்த் சிங்கிடம் சுமார் 1,000 வகையான தாவரங்களும் 350 வகையான மூலிகைகளும் உள்ளன. 2019 ஆம் ஆண்டில், திருவள்ளுவர் மற்றும் அவரது போதனைகள் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்த, ஜஸ்வந்த் தனது தோட்டத்தில் இரண்டு மரங்களில் திருவள்ளுவரின் உருவத்தை செதுக்கியிருந்தார். “இந்த நடவடிக்கைகள் அனைத்தும் திருவள்ளுவரையும் அவரது போதனைகளையும் பரப்புவதற்கான சிறிய வழிகள். திருக்குறளைக் (Thirukkural) கற்றுக் கொள்ளவும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்க நான் விரும்பினேன்" என்று அவர் குறுகிறார்.
பிறப்பால் ஒரு பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங்கிற்கு திருவள்ளுவர் மீது உள்ள அபிமானமும், திருக்குறள் மீது உள்ள ஆர்வமும், அதை பரப்ப அவர் எடுக்கும் முயற்சிகளும் பலரை அதிசயிக்க வைக்கின்றன. அவரது இந்த ஒப்பற்ற முயற்சிகளுக்கு எமது வாழ்த்துக்கள்!!
ALSO READ: போகி கொண்டாட்டம்: சென்னையில் புகை மூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR