‘காகம் இவ்வளவு ஸ்மார்டா...’: மக்களை வியப்பில் ஆழ்த்திய வைரல் வீடியோ!

காகம் மிகவும் புத்திசாலியானது என்பதை பல்வேறு கால கட்டங்களில் பல ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 3, 2022, 01:02 PM IST
  • காகத்தின் புத்திசாலித்தனம் மக்களை வியக்க வைத்தது
  • புதிரை மிக எளிதாக தீர்க்கும் திறன்
  • இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரலானது.
‘காகம் இவ்வளவு ஸ்மார்டா...’: மக்களை வியப்பில் ஆழ்த்திய வைரல் வீடியோ! title=

Crow Viral Video: காகம் மிகவும் புத்திசாலியானது என்பதை பல்வேறு கால கட்டங்களில் பல ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறியுள்ளது. நாம் கூட, தாகமான காகம், எப்படி தண்ணீர் நிரப்பிய குடத்தில், குச்சிகளை போட்டு நிரப்பி, கீழே இருந்த நீர்ம்  மட்டத்தை மேல்;ஏ கொண்டு வந்து தாகத்தை தீர்த்துக் கொண்ட கதையை படித்திருப்போம். அவை கதையல்ல நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலான கேம்கள் பல உள்ளன. அதனால் அவர்களின் IQ அளவு மேலும் அதிகரிக்கும். அந்த வகையிலான கேம் ஒன்றை அனாயசமாக விளையாடும் காகத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ஆம், காகத்தின் புத்திசாலித்தனம் உங்கள் பெரும் ஆச்சர்யத்த கொடுக்கும். இந்த காகம் எப்படி இவ்வளவு புத்திசாலி என்பதை. கேமை அது திறன்பட விளையாடுவதை பார்த்து அறிந்து கொள்ளலாம். 

ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!

குழந்தைகளால் எளிதில் செய்ய முடியாத புதிர்களை தீர்த்து வைக்கும் இந்த காகம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கைகள் புதிர்களை விரைவாக தீர்த்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

ஒரு நபர் காகத்தின் முன் வெவ்வேறு வடிவங்கள் அடங்கிய பெட்டிகளை வைத்து, அதே வடிவத்தில் சிறிய துண்டுகளை வெளியே வைத்திருக்கிறார். அங்கு இருந்த காகம், சரியாக வடிவத்தை கணித்து அதற்கு உரிய துளையில் போட்டன.  

ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!

காகங்கள் வெளியே வைக்கப்பட்டிருந்த வடிவ யூனிட்களை ஒவ்வொன்றாகத் தம் அலகுகளால் எடுத்துப் பெட்டிக்குள் வைக்க முயன்றன. காகம் பல துண்டுகளை ஒவ்வொன்றாக, மிகச்சரியாக அதற்குரிய பெட்டியில் போட்ட பிறகு அருகில் நின்றவரிடம் வந்து கையில் வைத்திருந்த உணவை சாப்பிடுவதை வீடியொவில் காணலாம்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Desi Sarcasm (desi.sarcasm) பகிர்ந்துள்ளார்.

ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News