மனித பற்கள் கொண்ட நண்டு; இணைய உலகை அதிர வைத்த வைரல் புகைப்படம்

Crab with Human-like Teeth: இணைய உலகம் ஆச்சர்யங்களையும் வியப்புகளை அள்ளித் தருவதில் நம்மை ஒரு போதும் ஏமாற்றுவதே இல்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 02:48 PM IST
  • புகைப்படக்கலைஞரான ரோமன் ஃபெடோர்ட்சோவ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம்.
  • ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ள தலைப்பு.
  • கடல் அசுரன் புகைப்படங்களின் விசித்திரமான பட தொகுப்பு.
மனித பற்கள் கொண்ட நண்டு; இணைய உலகை அதிர வைத்த வைரல் புகைப்படம்  title=

ஒரு ஆழ்கடல் மீனவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அதிர்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் சமீபத்தில் பிடிபட்ட ஒரு நண்டு ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது மட்டுலின்றி, பலர் குழம்பியும் போயுள்ளனர். "மனிதப் பற்களை கொண்டு நண்டு" சமூக ஊடகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேற்கு ரஷ்யாவில் மீன்பிடி இழுவை படகில் பணிபுரியும் புகைப்படக்கலைஞரான ரோமன் ஃபெடோர்ட்சோவ் (Roman Fedortsov), தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சில அசாதாரண ஆழ்கடல் கண்டுபிடிப்புகளின் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த வாரம் அவர் வெளியிட்ட இந்த நண்டின் புகைப்படம் படத்தை வெளியிட்ட  நிலையில், அது அவரது 652,000  ஃபாலோயர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே மிகவும் வைரல் செய்தியாகியது. இன்ஸ்டாகிராம் பதிவில், ரஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ள தலைப்பில் "நண்டுகள்... இருப்பினும், அவற்றில் ஏதோ  வித்தியாசமான அல்லது பயமுறுத்தும் வகையிலான விஷயம். இயற்கையில் அதிசயத்தை மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை" என பதிவிடப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இந்த படம் பகிரப்பட்ட உடனேயே இதற்கு நிறைய லைக்குகளும் கருத்துகளும் குவிந்தன. 

மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்

பெடோர்சோவ் கடல் அசுரன் புகைப்படங்களின் விசித்திரமான பட தொகுப்பை வைத்துள்ளார் எனலாம். அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளில், வித்தியாசமாக தோற்றம் அளிக்கும், சிலந்தியை போல் தோற்றமளிக்கும் மீன், மண்புழுவை போல தோற்றம் அளிக்கும் மீன் மற்றும் குமிழியை போல் தோற்றமளிக்கும் உயிரினம் ஆகியவற்றின் புகைப்படங்கள் அடங்கும். மற்ற படங்களில், நீர்வாழ் உயிரினங்கள் இயற்கையாக நீந்துவதைக் காணலாம். ஜூன் மாதம் அமெரிக்கக் கடற்கரையில் கரை ஒதுங்கிய விசித்திரமான தோற்றமுடைய இறந்த கடல் உயிரினம் குறித்த இவரது படமும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகின.

மேலும் படிக்க | Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News