Mongoose and King Cobra Video: பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வந்தா எப்படி இருக்கும்னு சொல்லத் தேவையில்லை. இந்த இரண்டும்.. ஒருவரையொருவர் எதிர்கொண்டால் அங்கு கடும் சண்டை நடக்கப் போகிறது என்பது அர்த்தம். அந்த போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது கடினம். அந்த அளவுக்கு பெரும் போர் நடக்கும்.
பாம்புக்கும் கீரிக்கும் ஒரு பரஸ்பரப் பகை உருவாகிவிட்டது. எதேச்சையாக இரண்டும் வழியில் சந்தித்துக்கொண்டால் ஒன்றை விட்டு ஒன்று விலகிப் போகாமல் ஒரு தீவிரமான சண்டைக்குத் தயாராகிவிடும். சண்டை என்று ஆரம்பித்துவிட்டால் அது வெகுநேரம் நீடிக்கும். ஆனால், பெரும்பாலான சண்டைகளில் கீரியே வெற்றி பெறுகிறது. பெரிய பாம்புகளால் மட்டுமே மங்கூஸைக் கட்டுப்படுத்த முடியும்.
சமீபத்தில், ஒரு பெரிய பாம்புடன் கீரி சண்டையிடும் வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பெரிய பாம்பு தவறுதலாக ஒரு அறையில் சிக்கிக் கொண்டது. அந்த பாம்பு வெளியேறுவதற்கு இடத்தைத் தேடிக்கொண்டு இருக்கையில், கரெக்ட்டா, அஞ்சு இரண்டு மங்கூஸ்கள் வந்தன.
ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு!
அடுத்து என்ன.. அந்த இரண்டு மங்கூஸ்களும் பாம்பை சீண்டுகின்றன. இதற்கிடையில் ஒரு முங்கூஸ் நேராக பாம்பை கடிக்க முயன்றது. "நானும் சளைத்தவன் இல்லை டா" எட்ன்று பாம்பு மின்னல் வேகத்தில் எதிர் தாக்குதலை தொடுத்தது.
பாம்பு தாக்க முயன்றபோது, மங்கூஸ் சாமர்த்தியமாக தப்பியது. இந்த பாம்பு பார்ப்பதற்கு ராஜநாகம் போல இருக்கிறது. வீடியோவின் இறுதியில் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாம்பு தாக்கும் காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருந்தது. அந்த வீடியோவை கீழே பாருங்கள்.
ALSO READ | Viral Video: அவரு தோளுல தொங்குறது துண்டு இல்ல, மலைப்பாம்பு: மலைக்க வைக்கும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR