வைரல் வீடியோ: விலங்குகளின் வீடியோக்கள் அனைவருக்கும் பிடிக்கும்! நாய்க்குட்டிகள் விளையாடுவது, பூனைக்குட்டிகளின் குறும்பான செயல்கள், யானைகளின் ஆட்டம் என பல அழகான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் வைரலாகின்றன.
இணைய உலகத்தில் பல வித வீடியோக்களை (Viral Video) நாம் தினமும் காண்கிறோம். இதில் காணும் வீடியோக்களில் உள்ள பல விஷயங்கள் நம்மை, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில் யானைகள் கூட்டம் ஒன்று பனியில் சறுக்கி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ | தலையில் ‘இடி’ விழும் பகீர் வீடியோ; ‘மின்னல் முரளியை’ நினைவுபடுத்தும் சம்பவம்..!!
மாஸ்கோ உயிரியல் பூங்காவில் படமாக்கப்பட்ட வீடியோவில், யானைகள் ஒன்று சேர்ந்து விளையாடி பனியில் சறுக்கி குறுப்பு செய்யும் அழகான வீடியோ நிச்சயம் உங்கள் மனதை கவரும். பெரிய யானைகள் தும்பிக்கையால் பனியை எடுத்து சுற்றி வீசுகையில், ஒரு குட்டி யானை ஒரு அழகான மூட்டை போல பனியில் சறுக்கிச் செல்வதைக் காண முடிந்தது. அதைஅ பார்த்தால், நமக்கும் பனியில் அவர்களுடன் விளையாடுவதைப் போன்ற உணர்வையும் ஏற்படுத்தும். இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் பகிர்ந்துள்ளது.
வீடியோவை இங்கே காணலாம்:
WATCH: Elephants at the Moscow Zoo enjoy playing in the snow pic.twitter.com/5kCpxvFwLW
— Reuters (@Reuters) December 27, 2021
இந்த வீடியோ வைரலாக பரவி பலரை, கவலையை மறந்து சிரிக்க வைத்துள்ளது. சிலர் இந்த வீடியோவஒ பாராட்டி, ஈமோஜிகள் மூலம் பாராட்டும் அதே நேரத்தில், சிலர் யானைகளை சுதந்திரமாக விடாமல் அவற்றை சிறைப்பிடித்து வைத்திருப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.
ரஷ்யாவில் 11 யானைகள் மட்டுமே உள்ளன என்பதும் அவற்றில் நான்கு மாஸ்கோ உயிரியல் பூங்காவில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR