சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உருவாகும் திரிகிரஹி யோகம்! யாருக்கு பாதிப்பு? யாருக்கு சுபம்

Rare astronomical event 2023 January 23: இன்று இரவு வானத்தில் அற்புதமான அரிய காட்சியைக் காணலாம், வெற்றுக் கண்களால் 3 கிரகங்களையும் இன்று பார்க்க முடியும், அதிலும் மூன்றையும் ஒன்றாக பார்க்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2023, 03:07 PM IST
  • மூன்று கிரகங்கள் இணையும் அற்புத வானியல் நிகழ்வு
  • முக்கிரகங்களின் கூட்டை வெற்றுக் கண்களால் பார்க்கலாம்
  • சனி சந்திரன் சுக்கிரன் இணையும் அற்புத நாள்

Trending Photos

சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உருவாகும் திரிகிரஹி யோகம்! யாருக்கு பாதிப்பு? யாருக்கு சுபம் title=

Astronomical Events Today: அரிய வானியல் நிகழ்வு இன்று நிகழவிருக்கிறது. 23 ஜனவரி 2023 இன்று இரவு ஜோதிடம் மற்றும் வானியல் அடிப்படையில் மிகவும் முக்கியமான நாள் ஆகும். இன்று வானத்தில் சனி, சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்களின் அரிய கலவையை மக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.  வானத்தில் கோள்கள் இணையும் அபூர்வ காட்சியானது சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு வானில் அற்புதமாய் தோன்றவிருக்கிறது. ஜனவரி 22ஆம் தேதி சுக்கிரன் கிரகமும் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ள நிலையில், ஜனவரி 23, 2023 இரவு, சந்திரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இதன் மூலம் கும்பத்தில் திரிகிரஹி யோகம் உருவாகும். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த திரிகிரஹி யோகம் சனியின் மூல முக்கோண ராசியான கும்பத்தில் உருவாகும் என்பதுதான். இந்த மூன்று கோள்களும் இணைந்து ஏற்படுத்தும் அற்புதமான வானியல் நிகழ்வை,  இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும்.

சனி, சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து கும்பத்தில் வருவதால் உருவான திரிகிரஹி யோகம் வானில் தெளிவாகத் தெரியும். இந்த அரிய காட்சியை டெலஸ்கோப் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, இந்த மூன்று கிரகங்களும் மேற்கு திசையில் ஒன்றாகக் காணப்படும் என்று நிபுணர்களின் கூறுகின்றனர்.

வானில் அரைவட்ட சந்திரன், அதாவது அரிவாள் போன்ற வடிவம் காணப்படும். இதன் கீழ், சுக்கிரன் கோள் உச்சி போல் தெற்கு நோக்கி பிரகாசிக்கும். அப்போது சனி சுக்கிரனுக்கு கீழே காணப்படும்.

மேலும் படிக்க | யாருக்கு என்ன யோகம் யோகத்தைக் கொடுக்கும்? கஜகேசரி யோகம் உருவாவது எப்படி?

எவ்வளவு மணி நேரம் கிரகங்களை பார்க்கலாம்?

இந்த அரிய காட்சி ஒன்றரை மணி நேரம் மட்டுமே தெரியும். வானில் சுக்கிரன், சனி, சந்திரன் இணைந்த இந்த அரிய காட்சி மாலை 6.30 மணி முதல் தென்படத் தொடங்கும். இந்த காட்சியை 8 மணி வரை மட்டுமே பார்க்க முடியும். அதாவது, வானத்தில் முக்கியமான 3 கிரகங்கள் இணைந்திருக்கும் இந்த காட்சி ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருக்கும்.

தொலைநோக்கி இல்லாமல் சாதாரண கண்களால் பார்க்க முடியும். ஜோதிடத்தின் பார்வையில் இந்த நிகழ்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, வானியல் பார்வையிலும் இந்த நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கும்ப ராசியில் உருவாகும் இந்த திரிகிரஹி யோகத்தின் சுப, அசுப பலன்கள் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்பதால் இந்தியாவில் இந்த திரிகிரஹி யோகத்தின் பலன்களை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கவுள்ள ராசிகள் இவை: நிவாரணம் காண பரிகாரங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News