ராசிபலன் ஜூன் 29, 2023: இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட நாள்... கேட்டது கிடைக்கும்!!

Daily Horoscope June 29, 2023: இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2023, 05:43 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.
  • வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
  • எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
ராசிபலன் ஜூன் 29, 2023: இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட நாள்... கேட்டது கிடைக்கும்!! title=

தினப்பலன், ஜூன் 29 2023: கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அன்றைய பலன்கள் அமைகின்றன.  இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கின்றது? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? இந்த பதில் தெரிந்துகொள்ளாலாம். 

மேஷம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

மிதுனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கடகம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | ஜூலை மாத ராசி பலன்: புது வேலை கூடவே புரமோசன் கிடைக்கும்..முழு ராசிபலன் இதோ

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.

கன்னி
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

துலாம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். 

விருச்சிகம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

தனுசு
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்
இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.

கும்பம்
இன்று பிள்ளைகளால் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பு வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் யோசித்து செயல்பட்டால் நற்பலன் கிட்டும்.

மீனம்
இன்று  மீன ராசிக்காரர்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அடுத்த 147 நாட்கள் ஜாக்பாட்.. குருவால் இந்த ராசிகளுக்கு நிதி ஆதாயம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News