உங்கள் மனைவிக்கு இந்த ராசியா? உங்க வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். அதிர்ஷ்ட தேவதைகளாக பிறக்கும் பெண்களின் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2023, 04:33 PM IST
  • ரிஷப ராசி பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
  • மகர ராசி பெண்கள் மிகவும் கடினமாக உழைப்பவர்கள்.
உங்கள் மனைவிக்கு இந்த ராசியா? உங்க வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும் title=

ஒவ்வொரு மனிதனும் தனது விதியை சுமந்துகொண்டு பிறக்கிறான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நெருங்கியவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச் செய்கிறார்கள். அவர்களுடன் இருப்பதால், அவர்களது பெற்றோர், வாழ்க்கைத் துணை ஆகியோரது அதிர்ஷ்டமும் பிரகாசிக்கிறது. சில பெண்களின் ராசி அபரிமிதமான அதிர்ஷ்டத்தைக் கொண்டிருக்கும். இவர்களுக்கு திருமணம் ஆனவுடன், தங்கள் அதிர்ஷ்டத்தால், கணவனின் வாழ்வையும் அதிர்ஷ்டத்தையும் இவர்கள் பிரகாசிக்கச் செய்கிறார்கள். அதிர்ஷ்ட தேவதைகளாக பிறக்கும் பெண்களின் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷப ராசி பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் கடின உழைப்பாளிகள். நேர்மையானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் இருக்கும் இவர்கள் உயர் பதவிகளை அடைகிறார்கள். இதனுடன், அவர்கள் கணவருக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக பிரகாசிக்கிறார்கள். ரிஷப ராசிப்பெண்களை திருமணம் செய்து கொண்டால், அந்த நபர் வாழ்க்கையில் வேகமாக வெற்றி பெறுகிறார். இந்த பெண்கள் தனது கணவனை அனைத்து வகையிலும் ஆதரித்து அவரது கனவுகளை நிறைவேற்ற உதவுகிறார்கள்.

மேலும் படிக்க | அடுத்த 6 மாதம் சனியால் இந்த ராசிகளுக்கு உயர் பதவி, பண வரவு கிடைக்கும்

கன்னி ராசி பெண்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் பக்குவம் மிகுந்தவர்கள். அவர்கள் அனைத்து பணிகளையும் கவனமாகவும் நன்றாகவும் செய்கிறார்கள். அவர்கள் இயல்பிலேயே மிகவும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். கன்னி ராசிப்பெண்கள் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்கள்.

மகர ராசி பெண்கள் மிகவும் கடினமாக உழைப்பவர்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் இயல்பு கொண்டவர்கள். மகர ராசிப்பெண்கள் சவால்களுக்கு பயப்படுவதில்லை, எடுத்த காரியத்தை முடிக்காமல் கைவிடுவதும் இல்லை. 

கையில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தால்தான் இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். அதே போல் இவர்கள் தங்கள் வாழ்க்கை துணையின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகிக்கிறாள். தொலைநோக்குப் பார்வை கொண்ட இவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்குவதில் வல்லவர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வார ராசிபலன்! இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News