EPFO ELI Scheme: மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு... UAN எண்ணை ஆக்டிவேட் செய்யும் எளிய முறை

EPFO ELI திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும், உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கும் ஆன கலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2025, 03:25 PM IST
  • வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெற செய்ய வேண்டியவை.
  • 2024 மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ELI திட்டம் குறித்து அறிவித்தார்.
  • ELI திட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன: A, B மற்றும் C.
EPFO ELI Scheme: மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு... UAN எண்ணை ஆக்டிவேட் செய்யும் எளிய முறை title=

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் EPFO ELI திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும், உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கும் ஆன கலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு காலக்கெடுவை மார்ச் 15, 2025 வரை நீட்டித்துள்ளது. காலகெடு நீட்டிக்கப்படுவதாக என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிப்ரவரி 21, 2025 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடு ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முந்தைய காலக்கெடு பிப்ரவரி 15, 2025 என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெற விரும்பும் ஊழியர்கள் தங்கள் UAN எண்ணை ஆக்டிவேட் செய்து, தங்கள் வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும். கடந்த 2024 மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ELI திட்டத்தைத் தொடங்கினார். 

ELI திட்டத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன: A, B மற்றும் C.

1. திட்டம் A வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் சேரும் முதல் நபர்களை மையமாகக் கொண்டிருக்கும்

2. திட்டம் B உற்பத்தியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்

3. திட்டம் C முதலாளிகளுக்கான ஆதரவில் கவனம் செலுத்தும்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்பு

UAN என்றால் என்ன?

UAN என்பது தகுதியுள்ள ஒவ்வொரு சம்பளம் பெறும் ஊழியருக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் ஒதுக்கப்பட்ட 12 இலக்க எண்ணாகும். இது அவர்களின் பணிக்காலம் முழுவதும் வெவ்வேறு முதலாளிகளிடையே அவர்களின் PF கணக்குகளை நிர்வகிப்பதற்கான ஒற்றை அணுகல் புள்ளியாக செயல்படுகிறது. இதனால் அவர்கள் ஒரே குடை எண்ணின் கீழ் தங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்புகளைக் கண்காணிக்கவும் அணுகவும் முடியும். நாட்டில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்த ஊக்குவிக்கும் வகையிலான திட்டமான வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் பலன்களைப் பெற, உங்கள் ஆதாரை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும். 

ஆதார் அடிப்படையிலான OTP மூலம் EPF UAN எண்ணை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது

1. PFO ​​உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.

2. "Important Links" என்பதன் கீழ் "Activate UAN" இணைப்பைக் கிளிக் செய்யவும்

3. UAN, ஆதார் எண், பெயர், பிறப்பு மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.

4. EPFOவின் டிஜிட்டல் சேவைகளை முழுமையாகப் பெற, ஊழியர்கள் தங்கள் மொபைல் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

5. ஆதார் OTP சரிபார்ப்புக்கு ஒப்புக்கொள்ளவும்.

6. உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற "Get Authorisation PIN" என்பதைக் கிளிக் செய்யவும்.

7. செயல்முறையை நிறைவு செய்ய OTP எண்ணை உள்ளிடவும்.

8. வெற்றிகரமாக ஆக்டிவேட் செய்யப்பட்டதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும்.

UAN செயல்படுத்தப்பட்டதும், ஊழியர்கள் தங்கள் PF கணக்குகளை நிர்வகித்தல், PF பாஸ்புக்குகளைப் பார்ப்பது மற்றும் பதிவிறக்குவது, முன்பணம் பெற விண்ணப்பிப்பது, பணத்தை திரும்பப் பெறுதல் அல்லது பரிமாற்றங்களுக்கான ஆன்லைன் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல், தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பித்தல் மற்றும் நிகழ்நேர கிளெய்ம் நிலை கண்காணிப்பு போன்ற EPFO வழங்கும் பல ஆன்லைன் சேவைகளை எளிதாக அணுகலாம்.

மேலும் படிக்க | EPFO Update: தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News