உங்களுக்கு இதே வேலையா...! சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை... அதிரடி உத்தரவு

Savukku Shankar Case: தன் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்த செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 24, 2025, 04:48 PM IST
  • சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
  • அனைத்து வழக்குகளும் கோவைக்கு மாற்றம்.
  • அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சந்தித்தாக வேண்டும்.
உங்களுக்கு இதே வேலையா...! சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை... அதிரடி உத்தரவு title=

Savukku Shankar Case In Supreme Court: தன் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

Savukku Shankar Case: தமிழ்நாடு அரசு தரப்பு

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த்ரா ஆஜாரானார். அவர்,"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 2022ஆம் ஆண்டு நவம்பரில் பிறப்பித்த உத்தரவில் தெள்ளத் தெளிவாக சவுக்கு சங்கருக்கு பிணை தருகிறோம். ஆனால் அவர் யூ-ட்யூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் எந்தவிதமான அவதூறு வீடியோவையும் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

அந்த உத்தரவை அறவே மதிக்காமல் இன்றும் அவதூறு வீடியோக்களை யூ-ட்யூப் மற்றும் பிற சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்" என வாதிட்டார். அதற்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா,"அதை தனி வழக்காக மேல்முறையீடு செய்யுங்கள். பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் நீதிமன்றத்தை அணுகலாம். அதை நான் தனி வழக்காக விசாரிக்கிறேன்" என்றார்.

Savukku Shankar Case: உச்சநீதிமன்றம் காட்டம்

விசாரணையின்போது சவுக்கு சங்கர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை காட்டமாக தெரிவித்தார். "உங்களின் வாதி சவுக்கு சங்கரை பற்றி நன்றாக தெரியும். எத்தனை முறை தான் அவர் நீதிமன்றத்தின் முன் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்பார் என தெரியவில்லை" என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்,"திருச்சி மாநகர காவல் துறையில் பெண் சார்பு ஆய்வாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சவுக்கு சங்கர் மீது திருச்சி மாநகர காவல் துறையில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பெண்களுக்கு எதிரான குற்றம். இந்த வழக்கிற்கும் யூ-ட்யூப் காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தை திசை திருப்பும் விதமாக மோசடியான முறையில் அந்த வழக்கிற்கும் தடை வாங்கியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தை எப்படி இவ்வாறு தவறாக வழிநடத்த முடியும்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அந்த வழக்கின் விசாரணையை தடையில் இருந்து நீக்கிவிடவும், திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையால் சவுக்கு சங்கரின் மேல் பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்வும் உத்தரவிட்டார். மேலும், பெண் சார்பு ஆய்வாளரிடம் நீதிமன்ற வளாகத்தினுள் தவறாக நடந்து கொண்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டது.

Savukku Shankar Case: கோவையில் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும்

உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில்,"சவுக்கு சங்கரின் மேல் பதியப்பட்ட அனைத்து வழக்குகளின் மீது பிறப்பிக்கப்பட்ட தடையானது இன்று (பிப். 24) நீக்கப்படுகிறது. முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது கோயம்புத்தூர் மாநகரில் பதிவான காரணத்தினால் மற்ற மாவட்டம் மாநகரம் அனைத்திலும் பதியப்பட்ட வழக்குகள் கோயம்புத்தூர் மாநகர காவல் துறைக்கு மாற்றப்படுகிறது. அங்கு விசாரணை மேற்கொண்டு அனைத்து வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம்" என குறிப்பிட்டது.

Savukku Shankar Case: சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

மேலும், "உங்களுக்கு இதே வேலையா? இனிவரும் காலங்களில் இது போல youtube மூலம் அவதூறு பரப்பிக் கொண்டு இருந்தால் பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்" என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

Savukku Shankar Case: சவுக்கு சங்கர் கோரிக்கைகள் நிராகரிப்பு

சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தை நாடியதே, தன் மீது பதியப்பட்ட பல வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன்தான். ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அந்த கோரிக்கையை இன்று நிராகரித்து விட்டார். சவுக்கு சங்கர் மேற்கோள் காட்டிய வழக்கு அருண் கோஸ்வாமி மீது நாடு முழுக்க பதியப்பட்ட பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டு முதலில் பதியப்பட்ட ஒரு வழக்கு மட்டுமே விசாரணை நடந்தது. அதேபோல் எனக்கும் சலுகை வேண்டும் என்று சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். 

அந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், அனைத்து வழக்குகளையும் கோயம்புத்தூர் மாநகர காவல் எல்லைக்கு மாற்றி அனைத்து வழக்குகளிலும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல் - அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் படிக்க | பாலியல் தொல்லை மட்டும் இல்லை! நகை கொள்ளையிலும் ஞானசேகரன்! 120 சவரன் பறிமுதல்!

மேலும் படிக்க | இன்று திறக்கப்படும் முதல்வர் மருந்தகம்! 75% குறைந்த விலையில் மருந்துகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News