சனி பகவானின் ராசி மாற்றம்: நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் வரும் புத்தாண்டின் முதல் மாதத்தில் தனது ராசியை மாற்றவுள்ளார். சில காலங்களாக வக்ர நிலையில் இருந்த சனி, அக்டோபர் 23, 2022 அன்று வக்ர நிவர்த்தியாகி தனது இயல்பு நிலைக்கு மாறினார். தற்போது சனிபகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். அடுத்த வருடம் அதாவது 2023-ல் சனியின் ராசி மாறும். இதுவரை சனி பகவானால் அனுகூலமற்ற சூழலில் சிக்கித் தவித்தவர்களுக்கு, சனிபகவானின் இந்த ராசி மாற்றம் சுப பலன்களை அளிக்கும்.
சனியின் ராசி மாற்றம் 2023
வரும் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஜோதிட கணக்கீடுகளின்படி, கலியுகத்தின் அதிபதியான சனி பகவான், புத்தாண்டில் தனது ராசியை மாற்றுகிறார். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். 2023 ஆம் ஆண்டின் மிக முக்கியமான ராசி மாற்றங்களில் சனியின் ராசி மாற்றமும் ஒன்றாகும்.
சனி 30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு செல்கிறார்
சனி 30 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு செல்கிறார். ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் கும்ப ராசிக்கு அதிபதியாகவும் உள்ளார். கும்பத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அற்புதமான நிகழ்வு நடக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும்
கும்ப ராசியில் சனி பிரவேசித்த உடனேயே 4 ராசிக்காரர்களுக்கும் சிறப்பான நிவாரணம் கிடைக்கும். சனியின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன்களை அளிக்கும். ஜாதகத்தில் சனி சுப நிலையில் இருந்தால், சனியின் ராசி மாற்றம் வேலை, தொழில், திருமண வாழ்க்கை போன்றவற்றுக்கு சாதகமாக அமையும்.
ஜனவரி 17, 2023 முதல், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். மறுபுறம், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் சனி தசையில் இருந்து விடுதலை பெறுவார்கள். இத்துடன் கும்ப ராசியில் சனியின் கடைசிக் கட்டம் தொடங்கும். இது சுப பலன்களை அளிக்கும். இந்த வகையில் சனியின் ராசி மாற்றம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களைத் தருகிறது.
மேலும் படிக்க | ராசி மாறினார் சூரியன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான நேரம், அமோகமாக வாழ்வார்கள்
இந்த தவறுகளை செய்யாதீர்கள்
ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தால், சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும். சனிபகவானின் அதிருப்தியை அதிகரிக்கும் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. சனியை மகிழ்விக்க இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
- விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
- பலவீனமானவர்களைச் சுரண்டாதீர்கள்.
- பணத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.
- ஆதரவற்ற மற்றும் பலவீனமான மக்களுக்கு உதவுங்கள்.
- தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யுங்கள்.
- குளிர்காலத்தில் ஏழைகளுக்கு கருப்பு போர்வைகளை தானம் செய்யுங்கள்.
- மற்றவர்களை குறை கூறாதீர்கள்.
- யாரையும் ஏமாற்றாதீர்கள்.
சனி பகாவானின் மகாமந்திரம் (சனி மந்திரம்)
ஓம் நிலாஞ்சன சமபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்I
சாயா மார்த்தாண்ட சம்பூதம், தம் நமாமி சனைஸ்வரம்II
சனி தோஷ நிவாரண மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்I
ஊர்வருக் மிவ் பந்தனன் மிருத்யோர்முக்ஷிய மா மிருதத்II
சனிக்கிழமையன்று இந்த மந்திரங்களை உச்சரிப்பது சனியின் அசுப பலன்களைப் போக்க உதவுகிறது. இதனுடன், சனி சாலிசாவை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும். இதனுடன் சனி பகவான் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சனிக்கிழமை தானம் செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மகரத்தில் இணையும் சனி - புதன் - சூரியன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ