இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி.. தொழில், பணம் பெறப்போகும் ராசிகள்

Budhan Peyarchi Palangal: புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும். அனைத்து விதத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 17, 2024, 08:56 PM IST
  • அனைத்து விதத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் தரும்.
  • புதன் செல்வ இடத்தில் இருந்தால் நன்மை.
இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி.. தொழில், பணம் பெறப்போகும் ராசிகள் title=

Mercury Transit In Virgo: ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மனசாட்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகின்றது. அதேபோல் புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி ஆவார். ஒருவரது ஜாதகத்தில் புதன் செல்வ இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.

இந்நிலையில் தற்போது வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி, 2024 அன்று காலை 06:22 மணிக்கு புதன் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். அதேபோல் இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மிதுனம் (Gemini Zodiac Sign): கடக ராசியில் புதன் பெயர்ச்சி அடையப் போவது மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படலாம். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும், திருமண வாழ்க்கையில் இனிமை உண்டாகும், சமூகத்தில் மரியாதை கூடலாம், வேலையில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஏற்ற நேரமாக இருக்கும். முயற்சி செய்தால் உங்களுக்கு விருப்பமான, மேன்மையான வேலை கிடைக்கும்.

மேலும் படிக்க | Sani Nakchatra Peyarchi: பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனீஸ்வரரால் யாருக்கெல்லாம் பாதிப்பு? சுலபமான பரிகாரங்கள்!

துலாம் (Libra Zodiac Sign): கடக ராசியில் கிரகங்களின் இளவரசரான புதன் பெயர்ச்சி அடையப் போவது துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றத்தை கொண்டு வரும். அதுமட்டுமின்றி வியாபாரத்திலும் லாபம் பெருகும். முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம். இந்த காலகட்டத்தில், துலாம் ராசியினர் வேலையில் வெற்றி பெறுவார்கள். பண உதவி கிடைக்கலாம். வியாபாரத்தில் மிகப் பெரிய ஆர்டரை பெறலாம்.

மகரம் (Capricorn Zodiac Sign): கடகத்தில் புதன் பெயர்ச்சி அடைவதால், மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறன் காரணமாக, வியாபாரத்திலும் மிகப்பெரிய ஒப்பந்தத்தைப் பெறலாம். சிறப்பு நபரின் உதவியுடன் பெரிய திட்டத்தை முடிப்பீர்கள். பொருளாதார நிலையும் முன்னேற்றம் அடையும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் அபூர்வ பிரதோஷம்! 3 பிரதோஷம் வரும் மாதத்தில் சனி பிரதோஷ காலத்தில் சிவன் நந்தி வழிபாடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News