ஆக்ஸ்ட் மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி அனைத்தும் அதிகரிக்கும்

Lucky Zodiacs of August: தொழில் ரீதியாக, சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2022, 12:07 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • இந்த மாதம் நிதி விஷயங்களில் பல நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கையில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
ஆக்ஸ்ட் மாத ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு லாபம், மகிழ்ச்சி அனைத்தும் அதிகரிக்கும் title=

ஆகஸ்ட் மாத ராசிபலன்: ஆங்கில நாட்காட்டியின் 8வது மாதம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்டது. ஜோதிட கணக்கீடுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் இருக்கும். இது தவிர இந்த மாதத்தில் சில சுப யோகங்களும் உருவாகும். கிரக மாற்றம் மற்றும் சுப யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பல நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது திட்டங்கள் வெற்றியடையும், கௌரவம் கூடும், பண ஆதாயத்திற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் ரீதியாக, சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் நிதி விஷயங்களில் பல நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் பணியில் நல்ல மற்றும் சுப செய்திகளை பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு, இந்த மாதம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான நல்ல அறிகுறிகள் உள்ளன. வியாபாரிகள் வணிக ஒப்பந்தங்களில் நல்ல லாபம் பெறலாம். ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்வீர்கள். காதல் வாழ்க்கையில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மறுபுறம், கணவன் மனைவி இடையே அன்பு கூடும். இந்த மாதம் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்: மகிழ்ச்சி பொங்கும் செல்வம் பெருகும் 

ரிஷப ராசி

ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஒரே நேரத்தில் பல இடங்களிலிருந்து பண வரவுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் வேலை அல்லது முதலீடு தொடர்பான திட்டத்தை உருவாக்க விரும்பினால், அதற்கு இந்த மாதம் நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களிலும் லாபம் பெறலாம். ஒட்டுமொத்தமாக, இந்த மாதம் உங்கள் நிதி விஷயத்தில் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலையால் உங்கள் செயல்திறன் மாதம் முழுவதும் மிகவும் பாராட்டப்படும். சொத்து வாங்க, அதில் முதலீடு செய்ய இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். சுப காரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதல் வாழ்க்கையின் அடிப்படையில் இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் துணையின் அன்பையும், குழந்தைகளின் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியையும் பெறுவார்கள்.

மிதுன ராசி

ஆகஸ்ட் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்கும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த மாதம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நிதி ரீதியாக, நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாத இறுதியில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும். முதலீட்டு விஷயத்திலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும். அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கூடி மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் நேரத்தை செலவிடுவார்கள்.

சிம்ம ராசி

இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சட்டப் பிரச்சனையில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரலாம். நிதிக் கண்ணோட்டத்தில், இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் அமையும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வழிகள் திறக்கப்படும். பணியிடத்தில் திட்டங்கள் வெற்றி பெறும். பணி தொடர்பான உங்கள் பயணம் வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு கடந்த மாதத்தை விட இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். மற்றும் வியாபாரத்தில் நீங்கள் தீட்டும் திட்டங்கள் வெற்றி பெறலாம். இது லாபம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றமும் பண ஆதாயமும் உண்டாகும். இந்த மாதம் உங்களின் சமூக நிலைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பல லாப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக இந்த மாதம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மாத இறுதியில், சொத்து தொடர்பான ஒப்பந்தம் உங்களுக்கு சாதகமாக வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் இந்த ராசிக்காரர்களின் கதி சூரியனைப் போல் பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News