ஆன்மீக வழிபாட்டிற்கு ஏற்ற மாதமாக விளங்கும் ஆடி மாதம், ஆடி செவ்வாய், வடிவள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், பதினெட்டாம் பெருக்கு என சிறப்பு வழிபாடு தினங்கள் பலவற்றைக் கொண்டது. தக்ஷிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், சக்தியின் ஸ்ரூபமாக கருதப்படும் பெண்கள் வழிபாட்டை மேற்கொள்வதால், வீட்டில் நிலவும் கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்து, நிம்மதியாக வாழலாம். ஆண்டியையும் அரசனாகும் சக்தி அம்மன் வழிபாட்டிற்கு உண்டு என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
விளக்கு ஏற்றி அம்மனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தால், குடும்ப பிரச்சினை மட்டுமல்ல, கடன் பிரச்சனை மட்டுமல்ல, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலவித பிரச்சினைகள் தீரும். ஆடி மாதம் முழுவதும், தீப வழிபாடு செய்ய முடியாதவர்கள், ஆடியில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு என உங்களுக்கு தோதாக இருக்கும் நாட்களில் மேற்கொள்ளலாம்.
தீப வழிபாட்டை தொடங்குவதற்கு முன்னால், வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் கோலமிட்டு, பூக்களால், பூஜை செய்யும் இட்டத்தையும், அம்மனையும் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் வேப்பிலை கொத்து ஒன்றை வைப்பது சிறப்பு. அம்மனுக்கு உகந்த வேப்பிலை, தினமும் பூஜை அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை, பழைய வேப்பிலைகளை எடுத்து விட்டு புதிய வேப்பிலைகளை வைக்க வேண்டும். வீட்டு வாசலில் அழகானக கோலமிட்டு, நிலையில் மஞ்சளும் குங்குமம் வைக்க வேண்டும்.
மேலும் படிக்க | 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட கோவில்! கடவுளின் கிரீடத்தையும் கொள்ளையடித்த அரசர்!
தீப வழிபாடு செய்யும் முறை
பூஜை செய்யும் அறையில் கோலமிட்ட இடத்தில், வேப்பிலைகளை சிறிது பரத்தி வைத்து, அதில் புதிதாய் வாங்கிய அகல் விளக்கை வைத்து, அதை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவும். அதில் நெய் அல்லது ஏன் நல்லெண்ணெய் ஊற்றி, சிவப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்றவும். பூஜை சாமான்கள் விற்கும் கடையில், சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்ட விளக்கு திரி எளிதாக கிடைக்கிறது.
தீப வழிபாடு செய்ய வேண்டிய காலம்
ஆடி மாதம் முழுவதும், தீப வழிபாடு செய்வது சிறப்பு. இயலாதவர்கள், செவ்வாய் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தீபம் ஏற்றி வழிபடலாம். முடிந்த அளவு வேப்பிலையை அதிகம் பயன்படுத்துவதால், பலன் சிறப்பாக கிடைக்கும். எந்த அளவிற்கு அதிக வேப்பிலையை பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாத மாவிளக்கு பூஜை
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வணங்குவதும் நன்மை தரும். மாவிளக்கு ஏற்றி பூஜை செய்ய செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை உகந்த நாளாகும். இது தவிர ஆடி கிருத்திகையிலும் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உண்டு.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சுக்கிரன் அருளால்... ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘சில’ ராசிகள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ