இந்து மதத்தில் இறைவழிபாடு என்பது மிகவும் அடிப்படையான தினசரி வழக்கமான ஒன்று. ராமநாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார் என்பது ஐதீகம். அதுமட்டுமல்ல, அனுமனுக்கு வைணவ சம்பிரதாயத்தில் வழங்கும் சிறப்புப் பெயர் சிறிய திருவடி ஆகும். இதுவே சைவ மரபில், ஆஞ்சநேயர் சிவனின் அவதாரமாக கருதப்படுகிறார். வைணவக் கோயில்களில் அனுமாருக்குத் தனி சன்னிதி உண்டு.
இராமராக விஷ்ணு அவதாரம் எடுத்தபோது, சிவன் அனுமன் அவதாரம் எடுத்தார் என்றும் சொல்வதுண்டு. ஆஞ்சநேயர் என்றால் அஞ்சாநெஞ்சன் என்று பொருள். அதாவது அவர் யாருக்கும் அஞ்சாத நெஞ்சத்தி உடையவர். இந்த அஞ்சாநெஞ்சனின் திருமார்பில் எப்போதும் சீதா சகித இராமபிரான் வீற்றிருக்கின்றனர். யாரையும் விட்டு வைக்காத சனீஸ்வரரையே ஆட்டி வைத்தவர் சனீஸ்வரர் என்பதால், ஆஞ்சநேய வழிபாடு மிகவும் பிரசித்தமானது.
அனைவருக்கும் பிடித்தமான அனுமார், உலகம் உள்ளவரையில் சிரஞ்சீவியாக வாழும் வரம் பெற்ற ஏழு பேரில் ஒருவர். ருத்ரனின் அம்சமான ஆஞ்சநேயர், பஞ்சபூதங்களில் ஒருவரான வாயு பகவானின் மைந்தன் ஆவார். பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒருங்கே பெற்ற அனுமார், யாராலும் செய்ய முடியாத அசாத்தியமான செயல்களை எல்லாம் அநாயசமாக செய்து முடிப்பவர்.
பக்தனுக்கு பக்தன் என்ற பெயரைப் பெற்ற அனுமார், வைகுண்டத்திற்கு போவதைவிட, ஸ்ரீராம நாமத்தை தனது காதால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் பூவுலகவாசியாக இருக்கிறார். ஸ்ரீராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொள்ள நினைத்தபோது, ஆஞ்சநேயரையும் வைகுண்டத்திற்கு வரும்படி அழைப்புவிடுத்தார்.
மேலும் படிக்க | கனவு இல்லம் நனவாக வழிபட வேண்டிய முறைகள்! எந்த ராசிக்கு என்ன கிரகத்தை வழிபடுவது?
ஆனால், அதை மறுத்த ஆஞ்சநேயர், வைகுண்டத்தில் விஷ்ணுவாக இருக்கும் பெருமாளுடன் இருப்பதைவிட, பூவுலகிலேயே ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டு, பக்தர்களுக்கு நல்வழி காட்டிக்கொண்டிருக்கவே விரும்புவதாக சொல்லி தனது பக்தியின் உச்சத்தைக் காட்டியவர் அனுமர்.
இதுபோல் அனுமாரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், சனிக்கிழமையில் அனுமன் வழிபாடு, சனிதோஷங்கள் அனைத்தையும் போக்கும் என்பது தெரியுமா? சனி பகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை அனுமன் வழிபாட்டிற்கு காரணமான கதை ஒன்று தொன்றுதொட்டு சொல்லப்பட்டுவருகிறது.
சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் கர்மவினைகள் சமநிலைக்கு வந்துவிடும் என்று சொல்வதற்கு சனீஸ்வரரை அனுமார் படுத்திய பாட்டை தெரிந்துக் கொள்ள வேண்டும். கடமை தவறாத சனீஸ்வரர், கடவுளையும் விட்டு வைக்கமாட்டார். அவர் அனுமானை பிடிக்க வந்தபோது, அதை தெரிந்துக் கொண்ட அனுமார் என்ன செய்தார் தெரியுமா?
தீவிர ராம பக்தரான சனீஸ்வரர், தனது வாலை மட்டும் தான் இருந்த இடத்தில் இருந்து வெளியே நீட்டியிருந்தார். ஆஞ்சநேயரை பிடிக்க வந்த சனிபகவான், வாலைப் பிடித்துக் கொண்டார். ஏழரைச்சனியாக பிடிக்க வேண்டியிருந்த நிலையில், வாலைப் பிடித்தபடியே அனுமாரை முழுவதுமாக பீடித்துவிடலாம் என்று நினைத்துவிட்டார்.
ஆனால், அனுமன், அப்போது சனியின் பிடியிலிருந்து தப்பிக்க, ராம நாமத்தை பாடிக்கொண்டே ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார். ஒரு அளவுக்கு மேல் சனீஸ்வரரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சாதாரணமாகவே ஆஞ்சநேயரை கட்டுப்படுத்த முடியாது என்னும்போது, ராமநாமத்தைப் பாடிக் கொண்டிருக்கும்போது கட்டுப்படுத்த முடியுமா?
வலி தாங்க முடியாத சனி பகவான், நீ எப்போது தான் குதிப்பதை நிறுத்துவாய்? என வாய்விட்டே கேட்டுவிட்டார். நீ என்னை பிடித்திருக்கும் ஏழரை ஆண்டு காலம் வரை இப்படித்தான் பாடி-ஆடிக் கொண்டிருப்பேன் என்று பதில் சொன்னதைக் கேட்டு சனீஸ்வரருக்கே பயம் வந்துவிட்டது.
ஆஞ்சநேயரை பிடித்துவிட்டாலும், அவரையே தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்தால் தன்னுடைய நிலை என்னவாகும், உலகில் உள்ள மற்றவர்களை எப்படி பிடிப்பது என்று எண்ணி ஆஞ்சநேயரிடம் இருந்து விலகினார். ஆனால்
ஆஞ்சநேயர் சும்மா விட்டுவிடுவாரா என்ன? சனீஸ்வரரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
என்னை விட்டு விலகியது போல, ஏழரை ஆண்டு சனி நடக்கும்போது, என்னை வழிபடும் பக்தர்களுக்கு தொந்தரவோ துன்பமோ கொடுக்கக்கூடாது என்று சனீஸ்வர பகவானிடம் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் அதை எப்போதும் பின்பற்றிவருவதாக ஐதீகம். அதனால் தான் ஏழரை சனி, அஷ்டம சனி காலத்தில் நமக்கான துன்பங்களிலிருந்து விலக ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதால், அனுமனின் அருள் கிடைக்கும் என்பதுடன் சனியினால் ஏற்படக்கூடிய துன்பங்களும் குறையும் என்று சொல்வார்கள்.
சனீஸ்வரரையே ஆட்டிப்படைத்த அனுமனை சனிக்கிழமைகளில் வழிபட்டால், ஆஞ்சநேயர், ராமர், ஈஸ்வரர், சனீஸ்வரர் என அனைவரின் கருணையையும் அருளையும் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ