தீபாவளிக்கு செய்ய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்! இவை அன்னை லட்சுமியின் அருள் பரிகாரங்கள்

Diwali And Wealth: வளமாக வாழ பணம் வேண்டும், அதற்கு அன்னை லட்சுமியின் அருள் வேண்டும். பணக்காரர் ஆவதற்கு வழி திறக்கும் ஒரு நல்ல நாள் தீபாவளி.  லட்சுமி தேவி உங்கள் வீட்டில் என்றென்றும் வாசம் செய்ய வழிகள் இவை. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 11, 2023, 09:57 AM IST
  • தீபாவளி வழிபாடுகள்
  • யம தீபம் ஏற்றுவது எப்படி?
  • ஐப்பசியில் எமதீபம்
தீபாவளிக்கு செய்ய வேண்டிய 3 முக்கிய காரியங்கள்! இவை அன்னை லட்சுமியின் அருள் பரிகாரங்கள் title=

நரக சதுர்தசி: ஐப்பசி கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி திதியான இன்று தீபாவளிக்கு முந்தைய நாளன்று செய்யும் சில விஷயங்கள் நரகாசுரனை அழித்த விஷ்ணுவின் மனதில் இடம் பிடிக்க உதவும். அதுமட்டுமல்ல, இந்த எளிய நடவடிக்கைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.

வளமாக வாழ பணம் வேண்டும், அதற்கு அன்னை லட்சுமியின் அருள் வேண்டும். பணக்காரர் ஆவதற்கு வழி திறக்கும் ஒரு நல்ல நாள் தீபாவளி  என்பது பரவலான நம்பிக்கை. லட்சுமி தேவி உங்கள் வீட்டில் என்றென்றும் வாசம் செய்ய வழிகள் இவை.
 
லட்சுமி தேவி உங்கள் வீட்டில் என்றென்றும் வாசம் செய்ய எளிய வழிமுறைகள்

இந்து மதத்தில் ஆண்டின் பண்டிகைகளில் தீபாவளி மிகப் பெரிய பண்டிகையாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவில் ஐந்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் தீபாவளி தொடர் பண்டிகை, நேற்று தொடங்கி நவம்பர் 14ம் தேதியன்ரு முடிவடைகிறது. இன்று நவம்பர் 11 ஆம் தேதி, வட இந்தியாவில் சோட்டி தீபாவளி அல்லது நரக் சதுர்தசி கொண்டாடப்படப்படுகிறது.

நரக சதுர்தி என்றும், ரூப் சௌதாஸ் அல்லது காளி சௌதாஸ் என்றும் அழைக்கப்படும் இன்று,தீபம் தானம் செய்வதன் மூலம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதம், கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில், இரவில் வீட்டின் வாசலில் தீபம் ஏற்ற வேண்டும்.

Deepavali deepam

சோதிட சாஸ்திரத்தில், தீபாவளியன்று இரவில் செய்யும் சில எளிய விஷயங்கள், பல பெரிய விஷயங்களுக்கு எளிய பரிகாரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களின் குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படாது. அன்னை லட்சுமியின் ஆசீர்வாதமும் பூரணமாய் கிடைக்கும்.  

நரக சதுர்தசி நாளில் செய்ய வேண்டிய சுலபமான பரிகாரங்கள் 
நரக சதுர்தசி எண்ணெய் குளியல்
நரக சதுர்தசி நாளில், காலையில் எண்ணெய் மசாஜ் செய்த பின் குளிக்கவும். அன்னை லட்சுமி எண்ணெயில் வசிப்பதாக நம்பப்படுகிறது. எனவே இன்று எண்ணெய்க் குளியல் அவசியம் செய்ய வேண்டும். லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தருகிறது மற்றும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: ஜூன் 2024 வரை இந்த ராசிகளுக்கு பொற்காலம், ராஜவாழ்க்கை... 

மாலையில் எம தீபம் 
நரக சதுர்தசி நாளன்று தெற்கு திசையில் தீபம் ஏற்றப்படுகிறது. இதனால் அகால மரண பயம் நீங்கும். விளக்கை ஏற்றிய பின் அணைக்க வேண்டாம். இந்நாளில் யமனை வழிபட்டால் நரகத்திலிருந்து விடுதலை பெறுகிறார். 

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவதற்கான காரணம் தெரியுமா?

புரட்டாசி மாத மகாளய மாவாசை தினத்தன்று தங்கள் சந்ததியினர் அளிக்கும் திதியை வாங்க வரும் முன்னோர்கள் பூமியிலேயே இருப்பார்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “எம தீபம்”. எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.  புரட்டாசியில் பூமிக்கு வரும் முன்னோர்களை வழியனுப்பும் யமதீபம் மிகவும் முக்கியமான பரிகாரம் ஆகும்.

காளி செளதாஸ்
காளி சௌதாஸ் என்றழைக்கப்படும் நரக சதுர்தசி நாளன்று அன்னை காளியை வணங்குவது வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகளை நீக்கும். இந்த நாளில் அன்னை காளியை வழிபடுவதன் மூலம், ஒரு நபரின் விருப்பங்கள் அனைத்து நிறைவேறும்.

மேலும் படிக்க | Diwali Alert: தீபாவளியில் இதை செய்தால், பலகாரத்துக்கு பதில் ஜெயில் களி தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News