இந்திய அணிக்கு விளையாட தகுதியற்ற 5 வீரர்கள்...!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு விளையாட தகுதியற்ற 5 வீரர்கள் யார்? என்பதை பார்க்கலாம்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:27 PM IST
இந்திய அணிக்கு விளையாட தகுதியற்ற 5 வீரர்கள்...! title=

இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மோசமான ஃப்ரமாமென்ஸை வெளிப்படுத்தியதால், இந்த வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கொடுத்தது தவறான முடிவு என அவர்களே நிரூபித்தார்கள். அவர்கள் யார் தெரியுமா? 

விஆர்வி சிங்

இந்திய அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டராக விஆர்வி சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது சாதனை சிறப்பாக இல்லாதபோதும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்ததால் இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 11.75 சராசரியில் 47 ரன்கள் மட்டுமே எடுத்தார். 53.38 பந்துவீச்சு சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சுதீப் தியாகி

இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு சுதீப் தியாகிக்கு கிடைத்தது. ஒருமுறையாவது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற கனவு கண்டுகொண்டிருக்கும் லட்சக்கணக்கான வீரர்களிடையே, அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத அவர், 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

மேலும் படிக்க | இந்திய அணியை வெற்றிபெற வைக்கப்போகும் அந்த 3 பேர்.! ரோகித் - விராட் இல்லை

மன்பிரீத் கோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இந்திய அணிக்காக விளையாட வந்தவர் மன்பிரீத் கோனி. தோனிக்கு நெருக்கமானவராக இருந்ததால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்து. 2 போட்டிகளுக்கும் மேல் இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு மன்பிரீத் கோனிக்கு கிடைக்கவில்லை. ஐபிஎல் போட்டியிலும் 44 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால், இப்போது முன்னாள் வீரர் என்ற அந்தஸ்தை ஏற்றுள்ளார்.

எம்எஸ்கே பிரசாத்

இந்திய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர் எம்எஸ்கே பிரசாத். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் விளாசிய அவர், அதன்பின் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மிக குறைந்த சர்வதேச அனுபவத்தை மட்டுமே கொண்டிருந்த எம்எஸ்கே பிரசாத் பின்னநாளில் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக உயர்ந்தார். இதற்காக பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. 

குர்கீரத் சிங் மான்

ஆல்ரவுண்டராக இருப்பார் என இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் குர்கீரத் சிங் மான். ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படாததால் இந்திய அணியில் இருந்து ஓங்கட்டப்பட்டார். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார்.

மேலும் படிக்க | மேலும் படிக்க | வார்னே ஒன்றும் சிறந்த பவுலர் இல்லை: இந்திய முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News