ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஆரோன் பின்ச், இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அவரின் ஸ்விங் பந்துவீச்சுக்கு எதிராக 15 வருடங்களாக தான் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஆரோன் பின்ச், தொடர்ச்சியாக நான்கு ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அந்த தொடரில் 6,6 மற்றும் 14 என்ற ரன்களில் அவுட்டான பின்ச் ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆனார். இது குறித்து ஆரோன் பின்சிடம் ரசிகர்கள் டிவிட்டர் எக்ஸில் கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க | சுரேஷ் ரெய்னாவை பின்பற்றுகிறாரா திலக் வர்மா? ஒப்பீடும் பல ஆச்சரியங்களும்
அதில், புவனேஷ்வர் குமார் ஏன் உங்களை கஷ்டப்படுத்தினார் என்பதை தெரிவிக்க முடியுமா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஆரோன் பின்ச், ஆமாம் அவரை எதிர்கொள்ள 15 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். புவனேஷ்வர் குமார் மட்டுமல்ல, பொதுவாகவே புதிய பந்துகளை ஸ்விங் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆரோன் பின்ச் தடுமாறினார். இது அவருடைய பலவீனமாகவும் அமைந்தது. அதேநேரத்தில் ஆரோன் பின்சை குறைத்தும் மதிப்பிட முடியாது. டெஸ்ட் போட்டிகளில் சொற்ப போட்டிகளில் மட்டுமே ஆடினாலும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அபாயகரமான பேட்ஸ்மேனாக இருக்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு 20 ஓவர் தொடர்களில் பங்கேற்று விளையாடி வரும் ஆரோன் பின்ச், பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார்.
(@AaronFinch5) August 10, 2023
2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்றதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆரோன் பின்ச். சர்வதேச கிரிக்கெட்டில் ஃபின்ச் 103 போட்டிகளில் 3,120 ரன்கள் குவித்துள்ளார். ஜூலை 2018-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்த அவரது குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் T20I வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 76 T20I போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்ததார். மேலும், இரண்டு சதங்கள் மற்றும் 19 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். ODI பொறுத்தவரையில், அவர் 146 போட்டிகளில் 5,406 ரன்கள் குவித்துள்ளார். 17 சதங்கள் மற்றும் 30 அரை சதங்கள் அடித்திருக்கிறார்.
மேலும் படிக்க | டீம் இண்டியாவை வீழ்த்தி ODI உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! பாக் வீரர் கணிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ