இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., 132 ரன்கள் குவித்துள்ளது!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரோலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகின்றது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அணித்தலைவர் விராட் கோலி 82 ரன்னுடனும், ரகானே 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் காலை தொடங்கியது. ரகானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேற, விராட் கோலி - ஹனுமா விஹாரி ஜோடி நிதானமாக விளையாடினர்.
Another fascinating day of Test cricket! Australia close day three in Perth on 132/4 in their second innings, with a lead of 175 runs over India after the visitors were dismissed for 283. #AUSvIND scorecard https://t.co/viG01Bpvlc pic.twitter.com/F3zt6p9jXV
— ICC (@ICC) December 16, 2018
இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இருந்தாலும், நிதானமாக விளையாடிய கோலி இப்போட்டியில் தனது 25-வது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். 214 பந்தில் 11 பவுண்டரியுடன் சதத்தை கோலி பதிவு செய்தார். பின்னர் பெட் கம்மிஸ் வீசிய பந்தில் 123(257) ரன்களுடன் வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற, ரிஷாப் பன்ட் நிதானமாக விளையாடி 36(50) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 105.6 வது பந்தில் பூம்ரா வெளியேற இந்தியா 283 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது ஆஸ்திரேலியா அணியின் ரன்களை விட 43 ரன்கள் குறைவு ஆகும்.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அரோன் பின்ச் 25(30) எடுத்த நிலையில் காயம் காரணமாக ஓய்வு பெற்றார். மார்க்கஸ் ஹரிஸ் 20(56), மார்ஸ் 5(11), பீட்டர் ஹான்ஸ்கோம்ப் 13(14) ரன்களில் வெளியேற உஸ்மான் கவாஜ் 41(102), டிம் பெய்னி 8(26) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 48 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்துள்ளது. ஆக மொத்தம் 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸி., அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தினை தொடர்கிறது. இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் இந்தியா ஆஸி., வீர்ரகளின் விக்கெட்டுகளை வீழ்த்து வெற்றி இலக்கை எட்டி பிடிக்க காத்திருக்கிறது.