உலக மல்யுத்தம் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதல் இடம் பிடித்துள்ளார்!
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, சமீப காலமாக சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி வருகின்றார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் 65kg பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து பஜ்ரங் புனியா தெரிவிக்கையில்... மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருனம் இது. கடன உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது என் குடும்பத்தார், நண்பர்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெள்ள வேண்டும் என்பதே லட்சியம், என் லட்சியத்தினை அடையும் வரை நான் ஓயப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
உலக மல்யுத்தம் தரவரிசை(UWW) 65kg பிரிவில் இந்தியாவின் புனியா 96 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கியுபாவின் அலெஜண்ட்ரோ என்ரிக் வால்டஸ் தொபேர் 66 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ரஸ்யாவின் அஹமத் சாக்காவே 62 புள்ளிகளுடன் முன்றாம் இடத்திலும் உள்ளனர். கடந்த மாதம் புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புனியாவை தோற்கடித்த ஜப்பானின் உலக சாம்பியன் தாகுடோ ஓட்டோகுரோ 56 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இதே போல பெண்களுக்கான 57kg எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் முதல் 10 இடத்திற்குள் இடம்பிடித்துள்ளனர்