IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு... அஸ்வினை வைத்து உலகக் கோப்பைக்கு மாஸ்டர் பிளான்!

Indian Squad Announcement: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2023, 09:55 PM IST
  • முதலிரண்டு போட்டிகளுக்கு 15 வீரர்களும், கடைசி போட்டிக்கு 17 வீரர்களும் அறிவிப்பு
  • ஷ்ரேயாஸ், அஸ்வின், வாஷிங்டன் ஆகியோர் இரண்டு ஸ்குவாடிலும் உள்ளனர்.
  • ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு.
IND vs AUS: இந்திய அணி அறிவிப்பு... அஸ்வினை வைத்து உலகக் கோப்பைக்கு மாஸ்டர் பிளான்! title=

Indian Squad Announcement: இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்த தொடரின் மீது தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

மூன்று போட்டிகள் 

செப். 22, 24, 27ஆம் தேதிகளில் முறையே மொஹாலி, இந்தூர், ராஜ்கோட் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. தற்போது ஆசிய கோப்பையை வென்று சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்தடுத்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருப்பது ரசிகர்களுக்கு ஆவலை தூண்டியது எனலாம். 

இரண்டு ஸ்குவாடுகள் அறிவிப்பு

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. குறிப்பாக, முதலிரண்டு போட்டிகளுக்கு ஒரு ஸ்குவாடும், கடைசி போட்டிக்கு ஒரு ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலிரண்டு போட்டிகளுக்கு 15 வீரர்களும், கடைசி போட்டிக்கு 17 வீரர்களும் அறிவிக்கப்ப்டுள்ளனர். இந்த இரண்டு ஸ்குவாடிலும் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆப் ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முதுகு வலியால் அவதிப்படும் ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டு ஸ்குவாடிலும் உள்ளார். 

மேலும் படிக்க | தன்னையே தியாகம் செய்தவர் தோனி... சொன்னவர் யாருனு பாத்த ஆச்சரியப்படுவீங்க!

சஞ்சு சாம்சன் புறகணிப்பு?

உலகக் கோப்பை ஸ்குவாடில் உள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யப்படும் விதமாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கலாம் என பல குரல்கள் எழுந்த நிலையில், முதலிரண்டு போட்டிகளில் அவருக்கு இடமில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்சர் படேல் வருவாரா?

முதலிரண்டு போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி போட்டிக்கான ஸ்குவாடில் உலகக் கோப்பை தொடரில் அறிவிக்கப்பட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அஸ்வின், வாஷிங்டன் ஆகியோர் மட்டும் கூடுதலாக அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அக்சர் படேல் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் சூழலில் அவரின் உடற்தகுதி இன்னும் உறுதிச்செய்யப்படவில்லை. 

முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி

கே.எல்.ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர். அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

கடைசி போட்டிக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, (துணை கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர். அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பையை சிராஜிடம் கொடுக்காமல் திலக் வர்மாவிடம் ரோகித் கொடுத்தது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News