புதுடெல்லி: வரவிருக்கும் இந்தியா மற்றும் இலங்கை வெள்ளை பந்து போட்டித் தொடர் நடத்துவதை மறுபரிசீலனை செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொடர் ஜூலை 18 முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.
India-Sri Lanka ODI series to start by July 18, due to #COVID19 cases in the Sri Lankan camp: BCCI Secy Jay Shah to ANI
(Pic: Jay Shah Twitter) pic.twitter.com/1Af9xQ9vXD
— ANI (@ANI) July 10, 2021
இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், வியாழக்கிழமையன்று இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
Also Read | 'Little Master' ஆக மாறுவதற்கு காது மச்சமே காரணம் - சுனில் கவாஸ்கர் சுவராசியத் தகவல்
அதற்கு அடுத்த நாள், மீண்டும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில், இலங்கை அணியின் வீடியோ ஆய்வாளர் ஜி.டி. நிரோஷனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து இலங்கை – இந்திய அணிகளின் ஒரு நாள் போட்டித்தொடர் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகள் எழுந்தன. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் போட்டிக்கான தேதியை அறிவித்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டு புதிய அட்டவணைப்படி நடத்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கை- இந்திய அணிகளுக்கான ஒருநாள் போட்டித்தொடர் ஜூலை 18 ஆம் தேதி துவங்கவுள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
Also Read | Criketers sex scandle: பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரபல கிரிக்கெட்டர்கள்
இலங்கை அணியில் இருவருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பதால், மேலும் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் ஒரு நாள் போட்டித் தொடர் ஜூலை 18ஆம் தேதியன்று தொடங்கும் என என்று ஜெய் ஷா இன்று உறுதிப்படுத்தினார்.
இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
Also Read | Euro 2020: இங்கிலாந்துக்கு எதிராக UEFA ஒழுங்கு நடவடிக்கை! காரணம் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR