IND vs BAN Toss Update, Playing XI: நடப்பு உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் லீக் போட்டி இன்று புனே நகரில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடப்பு தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர். வங்கதேச அணியும் மூன்று போட்டிகளில் விளையாடி ஆப்கானிஸ்தானிடம் மட்டுமே வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்தது.
இருப்பினும், இன்றைய போட்டியில் வங்கதேச அணி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 40 போட்டிகளை இந்தியா - வங்கதேச அணிகள் மோதி உள்ளன. இதில் 31 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் வங்கதேசமும் வென்றுள்ளன. அதிலும் இந்திய மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.
ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் வங்கதேசம் 3 போட்டிகளிலும், இந்தியா ஒரே ஒரு போட்டியிலுமே வென்றிருக்கிறது. இதன்மூலம், இன்றைய போட்டியில் இந்தியா (Team India) கவனமாக விளையாட வேண்டும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | IND vs BAN: டாஸ் வென்றால் ரோஹித் இதைதான் செய்யணும்... ஆடுகளம் யாருக்கு சாதகம்?
அந்த வகையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கேப்டன் ஷகிப் அல் ஹாசன் (Shakib Al Hasan) காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக செயல்படுகிறார். அவருக்கு பதில் நசும் அகமது உள்ள வருகிறார். மேலும், டஸ்கின் அகமதுக்கு பதில் ஹசன் மஹ்மூத் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மாற்றம் இல்லை.
Toss & Team News
Bangladesh have elected to bat against #TeamIndia.
A look at India's Playing XI
Follow the match https://t.co/GpxgVtP2fb#CWC23 | #INDvBAN | #MeninBlue pic.twitter.com/RuFBkS8XMj
— BCCI (@BCCI) October 19, 2023
பிளேயிங் லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், சிராஜ், பும்ரா.
வங்கேதசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
மேலும் படிக்க | 2023 உலகக் கோப்பை தொடரில் மிகவும் திறமையான பீல்டர் பட்டியலில் விராட் கோலி No.1
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ