ஐபிஎல்-ல் கலக்கி இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தியவர் நடராஜன். சேலம் அருகில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் பிறந்த இவர் தனது அசாத்திய திறமையின் மூலம் தற்போது உலகம் முழுவதும் தெரிந்த ஒரு பந்துவீச்சாளராக உள்ளார். நடராஜன் கடந்த 12 மாதங்களாக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய உயர்வு பெற்றுள்ளார். 2020-21-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தார். பின்பு டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவங்களிலும் அறிமுகமானார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 பதிப்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் நடராஜன்.
ALSO READ | IPL Mega Auction: பணக்கார பிரீத்தி ஜிந்தா! டெல்லி கேபிடல்ஸ் ஏழை? 8 அணிகளின் நிதி நிலைமை
ஐபிஎல்-ல் அசத்திய நடராஜன்க்கு இந்திய அணியின் கதவுகள் திறக்கப்பட்டது. தேசிய தேர்வாளர்கள் அவரது திறமையை கவனித்து, இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் சிறப்பாக பந்துவீசி சில விக்கெட்களையும் வீழ்த்தினார். தற்போது நடராஜன் தனது சொந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், " எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் என்று பெயர் சூட்டப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் இந்தியாவுக்காக அறிமுகமானேன், இந்த ஆண்டு (டிசம்பர்) கிரிக்கெட் மைதானம் அமைக்கிறேன். கடவுளுக்கு நன்றி" என்று தெரிவித்து இருந்தார்.
Happy to Announce that am setting up a new cricket ground with all the facilities in my village, Will be named as *NATARAJAN CRICKET GROUND(NCG)
#DreamsDoComeTrueLast year December I Made my debut for India, This year (December) am setting up a cricket ground #ThankGod pic.twitter.com/OdCO7AeEsZ— Natarajan (@Natarajan_91) December 15, 2021
தற்போது காயத்தில் அவதிபட்டு வரும் நடராஜன் கூடிய விரைவில் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் நடராஜனை தங்களது அணியில் எடுக்க கடும் போட்டி நிலவி வருகிறது.
ALSO READ | நான் கேப்டன் அல்ல என்பதை அவர்கள்தான் தீர்மானித்தார்கள் - விராட் கோலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR