முழு உடற்தகுதி பெரும்வரை என்னை அணியில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். தனது உடற்தகுதியில் ஈடுபட்டு வருவதாகவும், அதுவரை என்னை பரிசீலிக்க வேண்டாம் என்று இந்திய அணி தேர்வாளர்களிடம் ஹர்திக் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்திக் அதன் பிறகு பவுலிங் செய்யவில்லை.
ALSO READ ஐபிஎல் 2022: சென்னை, டெல்லி, மும்மை, கொல்கத்தா தக்க வைத்து கொண்ட வீரர்கள்!
நடந்து முடிந்த 2021 டி20 உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. உலக கோப்பையில் மொத்தமாக 4 ஓவர்கள் மட்டுமே வீசிய ஹர்திக் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்ததிலிருந்து முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.
டி20 உலகக் கோப்பையில் குறைவான ரன்கள் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான 3 டி20 போட்டிகளில் இடம்பெறாததை கண்டு மேலும் சில சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. எனவே பாண்டியா தனது உடற்தகுதியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரை சிறிது காலத்திற்கு அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் தேர்வாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பாண்டியா முழு நேர பந்துவீச்சுக்கு திரும்புவதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 28 வயதான ஹர்திக் சிறந்த ஆல்ரவுண்டராக விளையாடி டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அவரது உடற்தகுதி பிரச்சினைகள் அவரை 2018 முதல் டெஸ்ட் அணியில் இருந்து விலக்கி வைத்துள்ளது. 2020-திலும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சென்றார்.
தென் அரிக்கா சுற்றுப்பயணத்தில் பாண்டியா இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தெரியவில்லை. இருப்பினும் வெங்கடேச ஐயர் SA சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளார். இதற்கிடையில், பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்க வாய்ப்பில்லை என்றே பல தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு சீசன்களில் அவரது செயல்பாடுகள் குறைந்துவிட்டதால் அவர் மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு வருவார் என்றே எதிர்பார்க்கபடுகிறது.
ALSO READ இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் திட்டமிட்டப்படி நடைபெறுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR