ஆடும் லெவனில் பண்ட்தான் இருக்க வேண்டும் - கில்கிரிஸ்ட்

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ரிஷப் பண்ட்தான் இருக்க வேண்டுமென்று கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 23, 2022, 08:56 PM IST
  • டி20 உலகக்கோப்பை அடுத்த மாதம் தொடங்குகிறது
  • இந்திய அணியில் பண்ட், கார்த்திக் இருவருக்கும் இடம்
  • ஆடும் லெவனில் பண்ட் இடம்பெற வேண்டுமென கில்கிரிஸ்ட் கருத்து
ஆடும் லெவனில் பண்ட்தான் இருக்க வேண்டும் - கில்கிரிஸ்ட் title=

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. இதனையொட்டி இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடும் லெவனில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. ரிஷப் பண்ட்டுக்குத்தான் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்க வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

அதேசமயம் கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்டுகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்,ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh Karthik

இந்நிலையில் ரிஷப் பண்ட்டா இல்லை தினேஷ் கார்த்திக்கா என்பது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட், “ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும். 

மேலும் படிக்க | T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் மாற்றம்? பிசிசிஐ விரைவில் முக்கிய முடிவு

அவர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு அணிக்கு என்ன கொண்டு வருகிறார்கள், தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும். அவர் மிகவும் அருமையான டச் கேமைக் கொண்டுள்ளார்” என்றார்.

மேலும் படிக்க | Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News