இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் கேப்டனான பாபர் அஸாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தொடக்கம் தந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர், சோபிக்காமல் விரைவாகவே பெவிலியன் திரும்பினர்.
அவருக்கு பிறகு வந்த பாகிஸ்தான் வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடாததால் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Stars of the run-chase
Don't miss @imjadeja & @hardikpandya7 chatting post #TeamIndia's win against Pakistan
Coming soon on https://t.co/Z3MPyeKtDz #AsiaCup2022 | #INDvPAK pic.twitter.com/BfiH5iHrYW
— BCCI (@BCCI) August 28, 2022
அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணியும் மிடில் ஓவர்களில் தடுமாற ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணியில் விராட் கோலி 35 ரன்கள் எடுத்தார். நேற்று விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் கோலி இந்த ஆசிய கோப்பையில் ஃபார்முக்கு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று நடந்த போட்டியில் ரிஷப் பண்ட்க்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கவில்லை. ரோகித் சர்மாவின் இந்த முடிவு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பண்ட்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பண்ட்டை அணியில் சேர்க்காதது குறித்து கம்பீர் கூறுகையில், “டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி ஐந்து அல்லது 6 போட்டிகளில்தான் விளையாடுகிறது. இன்னும் நீங்கள் பிளேயிங் லெவனை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறீர்கள்.
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்குதான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கூட இல்லை. இது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ